வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் திரு பியூஷ் கோயல் பெல்ஜியம் வெளியுறவு மற்றும் வர்த்தக அமைச்சருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்
Posted On:
21 JAN 2025 9:19AM by PIB Chennai
இந்தியா- பெல்ஜியம் இடையே இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் திரு. பியூஷ் கோயல், பெல்ஜியம் வெளியுறவு, ஐரோப்பிய விவகாரங்கள் மற்றும் வெளியுறவு வர்த்தகத் துறை அமைச்சர் திரு. பெர்னார்ட் குயின்டினை பிரஸ்ஸல்ஸில் இன்று சந்தித்துப் பேசினார். இந்தக் கூட்டத்தில் ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, சுதந்திரமான நீதித்துறை ஆகிய பொதுவான மதிப்புகளின் அடிப்படையில் இந்தியா - பெல்ஜியம் இடையேயான நீண்டகால நட்புறவை வலுப்படுத்துவதன் தேவை வலியுறுத்தப்பட்டது. பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததுடன், இந்த கூட்டாண்மையை முன்னெடுத்துச் செல்வதற்கான புதிய வழிவகைகளைக் கண்டறிவது தொடர்பாகவும் ஆராய்ந்தனர். இந்தியா-பெல்ஜியம் இடையேயான வர்த்தகம் 2023-2024-ம் நிதியாண்டில் 15.07 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது அதே நேரத்தில், பெல்ஜியத்திலிருந்து இந்தியாவுக்கு வந்த அந்நிய நேரடி முதலீடுகள் 3.94 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
விவாதங்களின் போது, பரஸ்பர வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கான முக்கிய காரணிகளாக வெளிநாட்டு வர்த்தகத்தில் பெல்ஜியம் திகழ்வதையும், இந்தியாவின் துடிப்பான, வளர்ந்து வரும் பொருளாதாரத்தையும் இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.
ஐரோப்பிய ஒன்றியம்-இந்தியா இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுக்களின் முன்னேற்றம் குறித்தும் தலைவர்கள் விவாதித்தனர்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உயிரி அறிவியல், உள்கட்டமைப்பு, டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், உணவுப் பொருட்கள் போன்ற வளர்ந்து வரும் துறைகள் ஒத்துழைப்புக்கான முக்கிய பகுதிகளாக முன்னிலைப்படுத்தப்பட்டன.
வர்த்தக பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான வலுவான வழிமுறைகளை நிறுவுவதற்கான உறுதிப்பாட்டுடன் கூட்டம் நிறைவடைந்தது. வலுவான மற்றும் பரஸ்பரம் பயனளிக்கும் வர்த்தகக் கூட்டாண்மையை வளர்ப்பதில் தங்களது அர்ப்பணிப்பை இரு தலைவர்களும் உறுதிப்படுத்தினர்.
ஐரோப்பிய வர்த்தகத் தலைவர்கள், வைரத் தொழில் பிரதிநிதிகள் மற்றும் கடல்சார் சேவைகள், சூரிய சக்தி, தூய்மையான தொழில்நுட்பம், கழிவு சுத்திகரிப்பு, பசுமை ஹைட்ரஜன் ஆகிய துறைகளில் முதலீட்டாளர்களுடன் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் கலந்துரையாடினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2094679
***
TS/IR/RJ/KR
(Release ID: 2094755)
Visitor Counter : 23