அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

180 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான புவி காந்த வானியல் ஆய்வகத்தின் தரவுத் தொகுப்புகளை டிஜிட்டல் மயமாக்குவதற்காக கொலாபா ஆராய்ச்சி நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது

Posted On: 20 JAN 2025 4:57PM by PIB Chennai

இந்திய புவிகாந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் கொலாபா ஆராய்ச்சி மையத்தை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைச் செயலாளர் பேராசிரியர் அபய் கரண்டிகர் திறந்து வைத்தார்.

இந்நி்கழ்ச்சியில் பேசிய அவர்,  பழங்காலத்து  கருவிகளுடன் புவி காந்த  தரவுகளை இந்த கொலாபா ஆய்வகம் ஆவணப்படுத்தி உள்ளதை வரலாற்று ரீதியாக அவர்  எடுத்துத்தார். மேலும் இந்த நிறுவனம் பல ஆண்டுகளாக  புவி காந்த புயல்களின் செயல்பாடுகளை பதிவு செய்திருப்பதோடு  இந்தியாவின் அறிவியல் ஆய்வின் ஒரு அங்கமாகவும் இருந்து வந்துள்ளது என்றும் கூறினார்.

இந்தியாவின் மிகப் பழமையான ஆய்வகங்களில் ஒன்றான இந்த ஆராய்ச்சி மையத்தில் புவி காந்தப்புல மாறுபாடுகளின் வழக்கமான கணிப்புகள் குறித்த ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டன.  கொலாபா புவிகாந்த ஆராய்ச்சியின் 180 ஆண்டுகளுக்கும் மேலான ஆவணப்படுத்தப்பட்ட தரவுத் தொகுப்புகளை டிஜிட்டல் மயமாக்கும் பணியில் கவனம் செலுத்தப்படும் என்று அவர் கூறினார்.

பாரம்பரிய கட்டிடம் மற்றும் 9 ஊழியர்களைக் கொண்ட இந்த ஆய்வுத்தளத்தில் வரலாற்று ரீதியாக புவி காந்த புயல்கள் பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்குவதற்கான நவீன தொழில் நுட்பங்களை ஒருங்கிணைப்பதற்கும் இது உதவிடும்.

இது எதிர்காலத்தில் புவி காந்த புயல்கள் ஏற்படுவதற்கான நிகழ்நேர அளவுருக்கனை உருவாக்கவும் இது உதவிடும். இந்த மையம் விண்வெளி, வானிலை, அது சார்ந்த துறைகளின் தாக்கம் குறித்த ஆராய்ச்சிப் பணிகளையும் மேற்கொள்ளும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2094561

-------

TS/SV/KPG/KR/DL

 


(Release ID: 2094620) Visitor Counter : 23


Read this release in: English , Urdu , Marathi , Hindi