உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

 தேசிய பேரிடர் மீட்புப் படையின் 20-வது நிறுவன நாள் கொண்டாட்டங்கள் - விஜயவாடாவில் நாளை பங்கேற்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா

प्रविष्टि तिथि: 18 JAN 2025 5:23PM by PIB Chennai

 

ஆந்திரப் பிரதேசத்தின் விஜயவாடாவில் 2025 ஜனவரி 19 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) 20-வது நிறுவன தின கொண்டாட்டங்களில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமை விருந்தினராக பங்கேற்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில், மத்திய உள்துறை அமைச்சர்  ரூ. 200 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைத்து புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் மூன்று முக்கியமான மையங்களின் வளாகங்களையும் அமைச்சர் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்க உள்ளார்.

ஹைதராபாத்தில் உள்ள தேசிய காவல் அகாடமியில் (என்.பி.ஏ) புதிய 'ஒருங்கிணைந்த உட்புற துப்பாக்கி சுடும் பிரிவுக்கு' திரு அமித் ஷா அடிக்கல் நாட்டுகிறார். அங்கு ஐபிஎஸ் தகுதிகாண் அதிகாரிகளுக்கு துப்பாக்கி சுடும் திறன்களில் பயிற்சி அளிக்கப்படும்.

***

PLM/KV

 


(रिलीज़ आईडी: 2094070) आगंतुक पटल : 64
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Telugu , Kannada , Malayalam