பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தற்சார்பு இந்தியா: கடற்படைக்கு ஏவுகணைகள் வாங்குவதற்கான ஒப்பந்தம் ரூ. 2,960 கோடி மதிப்பில் பிடிஎல் நிறுவனத்துடன் கையெழுத்து

प्रविष्टि तिथि: 16 JAN 2025 12:21PM by PIB Chennai

 

இந்திய கடற்படைக்கு மேற்பரப்பில் இருந்து நடுத்தர தூர வான் ஏவுகணைகளை (எம்ஆர்எஸ்ஏஎம்) வழங்குவதற்காக பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் (பிடிஎல்) நிறுவனத்துடன் சுமார் ரூ. 2,960 கோடி மதிப்பில் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இன்று (2025 ஜனவரி 16) புதுதில்லியில் பாதுகாப்புச் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில் பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகளும் பிடிஎல் நிறுவன அதிகாரிகளும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

எம்ஆர்எஸ்ஏஎம் ஏவுகணை அமைப்பு ஒரு நிலையான அமைப்பாகும். தற்போது வாங்க கையெழுத்திடப்பட்டுள்ள ஏவுகணைகள் வருங்கால கப்பல்களில் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் இந்தியாவின் பாதுகாப்பு திறன்களை மேம்படுத்துவதற்கும், மேம்பட்ட ராணுவ தொழில்நுட்பத்தை உள்நாட்டு மயமாக்குவதற்கும் நடந்து வரும் முயற்சிகளில் ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிப்பதாக அமைந்துள்ளது.

 தற்சார்பு இந்தியா என்ற கருத்தை வலியுறுத்தி, இந்த ஏவுகணைகள் பெரும்பாலும் உள்நாட்டு உள்ளடக்கத்துடன் பிடிஎல் நிறுவனத்தால் உருவாக்கப்படும். இந்த ஒப்பந்தம் பல்வேறு குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உட்பட பாதுகாப்புத் துறையில் சுமார் 3.5 லட்சம் மனித நாட்கள் வேலைவாய்ப்பை உருவாக்கும்.

 

-----------------

TS/PLM/RS/KV


(रिलीज़ आईडी: 2093409) आगंतुक पटल : 98
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Gujarati , Telugu , Malayalam