நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம்
ஜவஹர் நவோதயா வித்யாலயா 25-வது தேசிய இளையோர் நாடாளுமன்ற போட்டி, 2023-2024-ன் பரிசளிப்பு விழா நாளை நடைபெறுகிறது
Posted On:
15 JAN 2025 12:03PM by PIB Chennai
ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளுக்கிடையிலான 25-வது தேசிய இளையோர் நாடாளுமன்ற போட்டி, 2023-24-ன் பரிசளிப்பு விழா நாளை (2025 ஜனவரி 16 வியாழக்கிழமை) புதுதில்லியில் உள்ள நாடாளுமன்ற நூலக கட்டிடத்தில் உள்ள ஜிஎம்சி பாலயோகி அரங்கில் நடைபெற உள்ளது.
சட்டம், நீதித்துறை (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் இணை அமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால், விழாவிற்குத் தலைமை தாங்கி போட்டியில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்கள் மற்றும் பள்ளிகளுக்கு பரிசுகளை வழங்குவார். இந்நிகழ்ச்சியில், ஜவஹர் நவோதயா வித்யாலயாக்களுக்கான 25-வது தேசிய இளையோர் நாடாளுமன்ற போட்டி, 2023-24-ல் முதலிடம் பிடித்த "மகாராஷ்டிராவின் சந்திரபூரில் (புனே பிராந்தியம்) உள்ள "ஜவஹர் நவோதயா வித்யாலயா" மாணவர்கள் இளைஞர் நாடாளுமன்ற போட்டியில் பங்கேற்ற நிகழ்ச்சியை மீண்டும் நடத்தி காட்டவுள்ளனர்.
நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம் கடந்த 28 ஆண்டுகளாக ஜவஹர் நவோதயா வித்யாலயாக்களில் இளைஞர் நாடாளுமன்ற போட்டிகளை ஏற்பாடு செய்து நடத்திவருகிறது. ஜவஹர் நவோதயா வித்யாலயாக்களுக்கான தேசிய இளையோர் நாடாளுமன்ற போட்டி திட்டத்தின் கீழ், 2023-24-ம் ஆண்டில் இந்தியா முழுவதும் உள்ள நவோதயா வித்யாலயா மையத்தின் 8 பிராந்தியங்களில் அமைந்துள்ள 80 வித்யாலயா பள்ளிகளில் இந்த 25-வது போட்டி நடத்தப்பட்டது.
சுய ஒழுக்கம், மாறுபட்ட கருத்துக்களை எதிர்கொள்ளுதல், தம் கருத்துக்களை நேர்மையாக வெளிப்படுத்துதல் மற்றும் ஜனநாயக வாழ்க்கை முறையின் பிற நற்பண்புகளை இளம் தலைமுறையினரிடையே வளர்த்தெடுத்தல் ஆகியவற்றை இளையோர் நாடாளுமன்ற திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
போட்டியில் முதலிடம் பெற்றதற்கான நாடாளுமன்ற கேடயம் மற்றும் கோப்பை மகாராஷ்டிராவின் சந்திரபூரில் உள்ள ஜவஹர் நவோதயா வித்யாலயாவுக்கு (புனே மண்டலம்) வழங்கப்படும். இது தவிர, அந்தந்த மண்டலங்களில் முதலிடம் பெறும் 7 வித்யாலயாக்களுக்கு கோப்பைகளை அமைச்சர் வழங்கவுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2092973
------------
ST/IR/RS/KV
(Release ID: 2093007)
Visitor Counter : 13