மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பரீட்சைக்கு பயமேன் 8-வது பதிப்பிற்கான பதிவு முடிவடைந்தது - 3.5 கோடிக்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளன

Posted On: 14 JAN 2025 4:08PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடியின் முன்னோடி நிகழ்வான பரிக்ஷா பே சர்ச்சா (PPC) எனப்படும் பரீட்சைக்கு பயமேன் நிகழ்ச்சிக்கான பதிவு நிறைவடைந்துள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களின் 3.5 கோடிக்கும் அதிகமான விண்ணப்பங்களுடன் விண்ணப்பங்கள் வந்துள்ளன. தேர்வு தொடர்பான மன அழுத்தத்தை கற்றல் கொண்டாட்டத் திருவிழாவாக மாற்றுவதற்கான நாடு தழுவிய இயக்கம் இது. பிபிசி எனப்படும் பரீட்சைக்கு பயமேன் -2025-ன் 8வது பதிப்பு இந்தியா, வெளிநாடுகளில் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களிடமிருந்து பதிவுகளின் அடிப்படையில் முன் எப்போதும் இல்லாத மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த குறிப்பிடத்தக்க சாதனை ஒரு உண்மையான மக்கள் இயக்கம் இது என்பதை என்ற எடுத்துக் காட்டுகிறது.

இதற்கான இணையதளப் பதிவு 14 டிசம்பர் 2024 முதல் 14 ஜனவரி 2025 வரை மைகவ் (MyGov.in) தளத்தில் நடைபெற்றது. கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பள்ளிக் கல்வி, எழுத்தறிவுத் துறையால் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படும் இந்த நிகழ்வு, மிகவும் எதிர்பார்க்கப்படும் கல்வி கொண்டாட்டமாக மாறியுள்ளது.

***

PLM/DL


(Release ID: 2092852) Visitor Counter : 18