பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மகர சங்கராந்தி, உத்தராயண் மற்றும் மக் பிஹு தினங்களில் அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

Posted On: 14 JAN 2025 8:40AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு மகர சங்கராந்தி, உத்தராயண் மற்றும் மக் பிஹு தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் தெரிவித்ததாவது:

“மகர சங்கராந்தியை முன்னிட்டு அனைவருக்கும் நல்வாழ்த்துகள். உத்தராயண சூரியனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்தப் புனித பண்டிகை, உங்கள் வாழ்க்கையில் புதிய சக்தியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தட்டும். ”

“இனிய உத்தராயண் நல்வாழ்த்துகள்! இந்தப் பண்டிகை அனைவரின் வாழ்வில் வெற்றியையும் மகிழ்ச்சியையும் அளிக்கட்டும்.”

“மக் பிஹு வாழ்த்துகள்! இயற்கையின் நிறைவையும், அறுவடையின் மகிழ்ச்சியையும், ஒற்றுமையின் உணர்வையும் நாம் கொண்டாடுகிறோம். இந்தப் பண்டிகை மகிழ்ச்சி மற்றும் ஒற்றுமையின் உணர்வை மேலும் அதிகரிக்கட்டும்.“

 

***

RB/DL


(Release ID: 2092715) Visitor Counter : 27