பிரதமர் அலுவலகம்
தில்லி நரைனாவில் நடைபெற்ற லோஹ்ரி கொண்டாட்டங்களில் பிரதமர் பங்கேற்பு
Posted On:
13 JAN 2025 10:15PM by PIB Chennai
தில்லி நரைனாவில் நடைபெற்ற லோஹ்ரி கொண்டாட்டங்களில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார். வட இந்தியாவைச் சேர்ந்தவர்களுக்கு லோஹ்ரி சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்று பிரதமர் திரு. மோடி குறிப்பிட்டார். "இது புதுப்பித்தல் மற்றும் நம்பிக்கையைக் குறிக்கிறது. இது விவசாயத்துடனும், கடினமாக உழைக்கும் நமது விவசாயிகளுடனும் தொடர்புடையது" என்று திரு மோடி கூறினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியதாவது:
"லோஹ்ரி, வட இந்தியாவைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. இது புதுப்பித்தல் மற்றும் நம்பிக்கையைக் குறிக்கிறது. இது விவசாயத்துடனும், கடினமாக உழைக்கும் நமது விவசாயிகளுடனும் தொடர்புடையது.
தில்லி, நரைனாவில் நடந்த நிகழ்ச்சியில் லோஹ்ரி கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இதில் பல்வேறு தரப்பு மக்கள், குறிப்பாக இளைஞர்கள், பெண்கள் கலந்து கொண்டனர்.
அனைவருக்கும் இனிய லோஹ்ரி வாழ்த்துகள்!”
****
RB/DL
(Release ID: 2092713)
Visitor Counter : 10
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam