பாதுகாப்பு அமைச்சகம்
ஏரோ இந்தியா 2025-ஐ முன்னிட்டு புதுதில்லியில் தூதர்களின் வட்டமேஜை கூட்டத்திற்கு பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமை தாங்குகிறார்
Posted On:
09 JAN 2025 4:07PM by PIB Chennai
ஏரோ இந்தியா 2025-க்கு முன்னோட்டமாக, பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் நாளை (ஜனவரி 10) புதுதில்லியில் வெளிநாட்டு தூதர்களின் வட்டமேஜை கூட்டத்திற்கு தலைமை தாங்குவார். இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக 150-க்கும் மேற்பட்ட நட்பு நாடுகளின் தூதுவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏரோ இந்தியா 2025-ன் முக்கிய நிகழ்வுகள் குறித்து அவர்களுக்கு விளக்கமளிக்கப்படும் , மேலும் அவர்களின் மிக மூத்த தலைவருக்கு பாதுகாப்பு அமைச்சரிடமிருந்து தனிப்பட்ட அழைப்பு விடுக்கப்படும். பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் மற்றும் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்.
ஆசியாவின் மிகப்பெரிய ஏரோ ஷோவான ஏரோ இந்தியாவின் 15- வது பதிப்பு கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள யெலஹங்காவில் உள்ள விமானப்படை நிலையத்தில் 2025 பிப்ரவரி 10 முதல் 14 வரை நடைபெற உள்ளது . ஐந்து நாட்கள் நடைபெறும் இதில் தொடக்க நிகழ்வு, பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாடு, தலைமை நிர்வாக அதிகாரிகளின் வட்டமேஜை சந்திப்பு ,ஐடெக்ஸ் ஸ்டார்ட்-அப் நிகழ்வு, வியக்க வைக்கும் விமான சாகச நிகழ்ச்சிகள், இந்தியா பெவிலியன் மற்றும் விண்வெளி நிறுவனங்களின் வர்த்தக கண்காட்சி ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பெரிய கண்காட்சி ஆகியன இடம் பெறும்.இதன் கருப்பொருள் "பில்லியன் வாய்ப்புகளுக்கான ஓடுபாதை"" என்பதாகும்.
ஏரோஸ்பேஸ் மற்றும் பாதுகாப்புத் துறையில் உலகின் முன்னணி தொழில்களிலிருந்து ஏராளமான கண்காட்சியாளர்களை ஏரோ இந்தியா ஈர்க்கிறது. இலக்கு பார்வையாளர்களுக்கு அவர்களின் திறன்கள், தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வெளிப்படுத்த தொழில்துறைக்கு இது ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது. ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த நிகழ்வு, விண்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில்களை இணைக்கவும், எதிர்காலத்தை வடிவமைக்கவும் தொழில்துறை தலைவர்களுக்கு ஒரு தளமாகச் செயல்படுகிறது..
***
TS/PKV/KV/KR/DL
(Release ID: 2091511)
Visitor Counter : 17