மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேர்வு குறித்த கலந்துரையாடலின் 8-வது பகுதியில் சாதனை அளவிலான பங்கேற்பு

Posted On: 09 JAN 2025 1:34PM by PIB Chennai

தேர்வு தொடர்பான மன அழுத்தத்தை கற்றலாகவும், கொண்டாட்டமாகவும்  மாற்றும் நாடு தழுவிய இயக்கமாக பிரதமர் திரு நரேந்திர மோடியின் முன்னோடி திட்டமான தேர்வு குறித்த கலந்துரையாடல்  நிகழ்ச்சி தொடர்ந்து பிரபலமடைந்து  வருகிறது. தேர்வு குறித்த கலந்துரையாடலின் 8-வது பகுதியில் பங்கேற்க உள்நாடு, வெளிநாடுகளில் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என 2.79 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பதிவு செய்துள்ளனர். இது முன்னெப்போதும் இல்லாத சாதனை அளவாகும். இந்த குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான பதிவு என்பது ஒரு உண்மையான மக்கள் இயக்கமாக இது  வளர்ந்து வருவதை  சுட்டிக்காட்டுகிறது.

மைகவ்.இன் (MyGov.in) இணையதளத்தில் இடம்பெற்றுள்ள தேர்வு குறித்த கலந்துரையாடல்  2025-க்கான இணையவழிப் பதிவு 2024  டிசம்பர் 14 அன்று தொடங்கியது. இது 2025 ஜனவரி 14 அன்று வரை நடைபெறவுள்ளது. இந்தக் கலந்துரையாடல் மாணவர்களின் மன நலனை ஒருங்கிணைப்பதிலும், தேர்வுகள் குறித்த நேர்மறையான கண்ணோட்டத்தை வளர்ப்பதிலும் அதன் வெற்றியை எடுத்துக்காட்டுகிறது.

கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையால் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படும் இந்த நிகழ்வு, மிகவும் எதிர்பார்க்கப்படும் கல்வி கொண்டாட்டமாக மாறியுள்ளது. 2024-ம் ஆண்டில் தேர்வு குறித்த கலந்துரையாடலின் 7-வது பகுதி புதுதில்லியின் பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்று பெரும் பாராட்டைப் பெற்றது.

தேர்வு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்ப  2025  ஜனவரி 12 (தேசிய இளைஞர் தினம்) முதல் 2025 ஜனவரி 23  (நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த தினம்) வரை பள்ளி அளவில் ஈடுபாட்டுடன் கூடிய தொடர்ச்சியான நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன.

•     உள்ளரங்கு விளையாட்டுகள்

•     மாரத்தான் ஓட்டங்கள்

•     மீம் போட்டிகள்

•     தெரு நாடகம்

•     யோகா மற்றும் தியான அமர்வுகள்

•     சுவரொட்டி தயாரிக்கும் போட்டிகள்

•     உத்வேகம் தரும் திரைப்படத் திரையிடல்கள்

•     மனநல பயிலரங்குகள் மற்றும் ஆலோசனை அமர்வுகள்

•     கவிதை / பாடல் / நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மேலும் விவரங்கள் மற்றும் பங்கேற்புக்கு, மைகவ்.இன் இணைய தளத்தைப் பார்வையிடவும்.

***

(Release ID: 2091395)

TS/IR/AG/KR

 


(Release ID: 2091441) Visitor Counter : 42