உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
இண்டஸ்ஃபுட் 2025 - இந்தியாவின் உணவுப் பொருளாதாரம் தொடர்பான உலகளாவிய கண்காட்சி
Posted On:
08 JAN 2025 6:39PM by PIB Chennai
2017-ம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து, இண்டஸ்ஃபுட் கண்காட்சி இந்தியாவின் உணவுப் பொருளாதாரத்தை வெளிப்படுத்தும் ஒரு குறிப்பிடத்தக்க தளமாக மாறியுள்ளது. அதே நேரத்தில் உலகளாவிய உணவு வணிகங்களை இது இந்திய உணவுத்துறையுடன் இணைக்கிறது. ஆசியாவின் முதன்மையான உணவு, பானங்கள் வர்த்தக கண்காட்சியான இண்டஸ்ஃபுட்டின் 8 வது பதிப்பை, மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்கள் துறை அமைச்சர் திரு சிராக் பாஸ்வான் இன்று (8 ஜனவரி 2025) கிரேட்டர் நொய்டாவில் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வு ஜனவரி 10 வரை நடைபெறும்.
வர்த்தகத் துறையின் ஆதரவுடன் இந்திய வர்த்தக மேம்பாட்டு கவுன்சில் ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்வு தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது, இது இந்தியாவின் உணவு தொழில்துறையின் வளர்ச்சியை பிரதிபலிக்கிறது. இந்த ஆண்டு, இண்டஸ்ஃபுட் 2025 மற்றொரு மைல்கல்லாக அமைந்துள்ளது. இது ஒருங்கிணைந்த உணவு வர்த்தக கண்காட்சியாக நடைபெறுகிறது.
15 வேளாண் பருவநிலை மண்டலங்களுடன், இந்தியா பல்வேறு வகையான விவசாய பயிர்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட நாடாகும். முற்போக்கான அரசு கொள்கைகள், வலுவான வேளாண் ஆதாரம், வேகமாக வளர்ந்து வரும் பதப்படுத்தப்பட்ட உணவுத் துறை, வளர்ந்து வரும் நுகர்வோர் சந்தை ஆகியவற்றின் இந்தியா உணவுத் துறையில் வாய்ப்புகளின் மையமாக உருவெடுத்து வருகிறது.
இண்டஸ்ஃபுட் 2025-ல் 20 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 1,800 கண்காட்சியாளர்கள் பங்கேற்கின்றனர். 80,000 சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் விரிவான கண்காட்சி நடைபெறுகிறது.
உணவுத் துறையில் சர்வதேச வர்த்தகத்திற்கான மையமாக இந்தியாவை நிலைநிறுத்துவதில் இண்டஸ்ஃபுட் தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கிறது. இத்துறையில் வளர்ச்சி, ஒத்துழைப்பு, முதலீடு ஆகியவற்றுக்கான மகத்தான வாய்ப்புகளை இது வழங்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2091236
***
TS/PLM/RS/DL
(Release ID: 2091284)
Visitor Counter : 24