நித்தி ஆயோக்
azadi ka amrit mahotsav

சில்லறை வணிகத்தில் பெண் தொழில் முனைவோர்களுக்கு அதிகாரம் அளிக்க நித்தி ஆயோக் புதிய நடவடிக்கை

Posted On: 08 JAN 2025 4:55PM by PIB Chennai

நித்தி ஆயோக்கின் பெண்  தொழில்முனைவோர் தளமானது  (WEP)  இந்தியாவின் மிகப்பெரிய 24 மணி நேர, சில்லறை விற்பனைச் சங்கிலியான நியூ ஷாப்புடன் இணைந்து எம்ப்பவர் பிஸ்-கனவு வாகனம் என்ற திட்டத்தை தொடங்கி உள்ளது.வெகுமதிக்கான பரிசு திட்டத்தின் கீழ் இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒழுங்கமைக்கப்பட்ட சில்லறை விற்பனைத் துறையில் வெற்றிபெறத் தேவையான திறன்கள் மற்றும் வளங்களுடன் பெண் தொழில்முனைவோரை தயார்படுத்துவதன் மூலம் அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆர்வமுள்ள பெண் தொழில்முனைவோருக்கு சில்லறை வணிக மேலாண்மை, டிஜிட்டல் கருவிகள், நிதி, கல்வியறிவு மற்றும் வணிக மேம்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய வழிகாட்டுதல் மற்றும் விரிவான பயிற்சியை எம்பவர் பிஸ் வழங்கும். நியூ ஷாப் உடனான இந்த ஒத்துழைப்பின் மூலம், இந்தத் தளம்  ஒரு வலுவான சில்லறை சூழல் அமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இது பெண் தொழில்முனைவோருக்கு அதிகாரம் அளிப்பதுடன் துறையில் நிலையான வளர்ச்சியை ஏற்படுத்தும்.

இந்த முயற்சியின் கீழ், 18 முதல் 35 வயதுக்கு உட்பட்ட ஐம்பது பங்கேற்பாளர்கள் குறிப்பிட்ட அளவுகோல்களின் அடிப்படையில் ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பங்கேற்பாளர்களில் முதல் இருபது பேர் நியூ ஷாப் உரிமையாளர் கட்டணத்தில் 100% தள்ளுபடியைப் பெறுவார்கள். இது தங்கள் சில்லறை வணிகங்களை சொந்தமாக வைத்திருக்கவும் இயக்கவும் அவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. தில்லி என்.சி.ஆர், பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், ஹரியானா, மத்தியப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பெண்களுக்காக இந்தத் திட்டம் தொடங்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2091175

***

TS/PKV/AG/DL

 


(Release ID: 2091228) Visitor Counter : 27