மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் பொருளாதார உருமாற்றத்திற்காக செயற்கை நுண்ணறிவுத் திறனைப் பயன்படுத்த இந்தியா ஏஐ, மைக்ரோசாப்ட் இணைந்து செயல்பட உள்ளன
प्रविष्टि तिथि:
08 JAN 2025 4:47PM by PIB Chennai
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனின் கீழ் உள்ள தன்னிச்சையான வணிகப் பிரிவான இந்தியா ஏஐ, நாட்டில் செயற்கை நுண்ணறிவை (ஏஐ) ஏற்றுக்கொள்வதற்கும், மேம்படுத்துவதற்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த உத்திசார்ந்த கூட்டாண்மை இந்தியா ஏஐ இயக்கத்தின் முக்கிய நோக்கங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.
- மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்தியா ஏஐ- உடன் இணைந்து, மாணவர்கள், கல்வியாளர்கள், மென்பொருள் உருவாக்குபவர்கள், அரசு அதிகாரிகள், பெண் தொழில்முனைவோர் உட்பட 5,00,000 பேர்களுக்கு 2026-ம் ஆண்டுக்குள் திறன் பயிற்சி அளிக்கும்.
- இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களில் கிராமப்புற செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்கும், ஹேக்கத்தான்கள், செயற்கை நுண்ணறிவு சந்தை மூலம் 1,00,000 செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிப்பாளர்கள், உருவாக்குபவர்களை இணைப்பதற்கு இந்த வாய்ப்பை ஏற்படுத்தும்.
- 10 மாநிலங்களில் உள்ள 20 தேசிய திறன் பயிற்சி நிறுவனங்கள் / தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப மையங்களில் செயற்கை நுண்ணறிவு உற்பத்தித்திறன் ஆய்வகங்களை அமைத்து, 20,000 கல்வியாளர்களுக்கு பயிற்சி அளிக்கவும், 200 தொழில்துறை பயிற்சி நிறுவனங்களில் 1,00,000 மாணவர்களுக்கு அடிப்படை செயற்கை நுண்ணறிவு படிப்புகளை மேம்படுத்தவும் உதவும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2091170
***
TS/IR/RR/DL
(रिलीज़ आईडी: 2091227)
आगंतुक पटल : 83