பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

எட்டாவது ஏவுகணை, வெடிமருந்து படகு அறிமுக விழா

Posted On: 07 JAN 2025 10:50AM by PIB Chennai

எட்டாவது, ஏவுகணை வெடிமருந்து படகு அறிமுக விழா  (எல்எஸ்ஏஎம் 22-யார்டு 132) நேற்று (06 ஜனவரி 2025) மும்பையில் உள்ள கடற்படை கப்பல்கட்டும் தளத்தில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக கடற்படை பராமரிப்பு பிரிவு பொறுப்பு அதிகாரி கமாண்டர் வினய் வெங்கட்ராம் கலந்து கொண்டார்.

11 ஏசிடிசிஎம் படகுகளை நிர்மாணித்து வழங்குவதற்கான ஒப்பந்தம் எம்எஸ்எம்இ கப்பல் கட்டும் தளமான தானேயில் உள்ள சூர்யதீப்தா ப்ராஜெக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் 05 மார்ச் 2021 அன்று மேற்கொள்ளப்பட்டு இருந்தது.  ஏழு ஏசிடிசிஎம் படகுகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன, மேலும் கப்பல் கட்டும் தளத்திற்கு நான்கு சுல்லேஜ் படகுகளை நிர்மாணித்து இந்திய கடற்படைக்கு வழங்குவதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் குறு,சிறு, நடுத்தர (MSME) நிறுவனங்களை ஊக்குவிக்கும் இந்திய கடற்படையின் உறுதிப்பாடு தெளிவாகிறது.

இந்த படகுகள் இந்திய கப்பல் விதிகள், ஒழுங்குமுறைகளைப் பின்பற்றி கட்டப்பட்டுள்ளன. இந்த படகுகள் இந்தியாவில் தயாரியுங்கள், தற்சார்பு இந்தியா ஆகிய முயற்சிகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்த படகுகள் கடற்படையில் சேர்க்கப்படுவதன் மூலம், இந்திய கடற்படை தளங்களுக்கு தளவாடங்கள் / வெடிமருந்துகளை கொண்டு செல்லுதல், எளிதாகும்.

----------

(Release ID: 2090784)

TS/PLM/RS/KR


(Release ID: 2090857) Visitor Counter : 29