பாதுகாப்பு அமைச்சகம்
பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், மாலத்தீவு பாதுகாப்பு அமைச்சர் திரு முகமது காசன் மாமூனை புதுதில்லியில் சந்திக்கிறார்
Posted On:
07 JAN 2025 11:11AM by PIB Chennai
புதுதில்லியில் நாளை (2025, ஜனவரி 08) பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், மாலத்தீவு பாதுகாப்பு அமைச்சர் திரு முகமது காசன் மாமூனுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்த பேச்சுவார்த்தையின் போது, மாலத்தீவு தேசிய பாதுகாப்புப் படைகளின் திறனை மேம்படுத்துவதற்கான பயிற்சி மற்றும் வழக்கமான பயிற்சிகள், பாதுகாப்பு திட்டங்கள், பயிலரங்குகள், கருத்தரங்குகள் உள்ளிட்ட இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பின் பல்வேறு அம்சங்களை இருநாட்டு அமைச்சர்களும் ஆய்வு செய்யவுள்ளனர்.
இந்தியாவும், மாலத்தீவும் ஆன்மீகம், வரலாறு, மொழி மற்றும் இன உறவுகளைப் பகிர்ந்து கொள்கின்றன. இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மை மற்றும் வளத்தைக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட இந்தியாவின் 'அண்டை நாடுகளுக்கு முதலிடம்' கொள்கையில் மாலத்தீவு சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது. மேலும், இந்திய பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பை பராமரிப்பதில் இரு நாடுகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனால் பிராந்தியத்தில் அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி என்ற இந்தியாவின் பார்வைக்கு இந்த ஒத்துழைப்பு பங்களிக்கிறது.
மாலத்தீவு பாதுகாப்பு அமைச்சர் 2025 ஜனவரி 8 முதல் 10 வரை மூன்று நாட்கள் பயணமாக இந்தியாவுக்கு வருகிறார். அப்போது அவர் கோவா, மும்பை ஆகிய இடங்களுக்கும் செல்கிறார்.
***
TS/IR/KV/KR
(Release ID: 2090828)
Visitor Counter : 24