பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி திரு சத்ய நாதெல்லா, பிரதமருடன் சந்திப்பு

प्रविष्टि तिथि: 06 JAN 2025 8:55PM by PIB Chennai

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி திரு. சத்ய நாதெல்லா, பிரதமர் திரு. நரேந்திர மோடியை புதுதில்லியில் சந்தித்துப் பேசினார்.

 

இந்தியாவில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் விரிவாக்கம் மற்றும் முதலீட்டுத் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதில் திரு மோடி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.. இருவரும் இச்சந்திப்பின்போது தொழில்நுட்பம், புத்தாக்கம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றின் பல்வேறு அம்சங்களைப் பற்றி விவாதித்தனர்.

 

இந்த சந்திப்பு குறித்து திரு. சத்ய நாதெல்லாவின் சமூக ஊடக எக்ஸ் தள  பதிவிற்கு  பதிலளித்து திரு மோடி கூறியதாவது:

 

"@satyanadella  திரு. சத்ய நாதெல்லா, உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி! இந்தியாவில்  மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் லட்சியமிக்க விரிவாக்கம் மற்றும் முதலீட்டு திட்டங்கள் பற்றி அறிந்து, மகிழ்ச்சி அடைகிறேன். நமது சந்திப்பின்போது, தொழில்நுட்பம், புத்தாக்கம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றின் பல்வேறு அம்சங்களைப் பற்றி விவாதித்தது சிறப்பானதாக இருந்தது.”

TS/BR/KR

***

(Release ID: 2090741)


(रिलीज़ आईडी: 2090815) आगंतुक पटल : 57
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam