கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உலகளாவிய மகா கும்பமேளா 2025

Posted On: 06 JAN 2025 5:38PM by PIB Chennai

மகா கும்பமேளாவின் மையப்பகுதியாக விளங்கும் பிரயாக்ராஜ் வரலாற்று மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகும். இந்த நகரம் புனித யாத்திரைக்கான தலமாக விளங்குவதால் இது  'தீர்த்ராஜ்' அல்லது புனித யாத்திரைக்கான தலங்களின் அரசன் எனப்  பெயரிடப்பட்டு பண்டைய நூல்கள் மற்றும் பயண நூல்களில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.    7-ம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த  சீனப் பயணி யுவான்சுவாங், பிரயாக்ராஜ் மகத்தான இயற்கை அழகு, வளம் மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த பிராந்தியம் என்று விவரித்துள்ளார். அங்குள்ள திரிவேணி சங்கமம் மற்றும் அங்கு கடைபிடிக்கப்படும் பல்வேறு சடங்குகள் குறித்த அவரது குறிப்புகள் மகா கும்பமேளாவின் ஆன்மீக  வலிமையை எதிரொலிக்கின்றன.

யுவான் சுவாங்கின் குறிப்புகள்  நம்பிக்கை மற்றும் சமூகத்தின் நல்லிணக்கம் ஒன்று சேருமிடமாக திரிவேணி சங்கமத்தை முன்னிலைப்படுத்துகின்றன. பிரயாக்ராஜில் நடைபெற்ற பிரம்மாண்டமான திருவிழாக்களில் பல்வேறு தரப்பினர் உட்பட 5,00,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் அங்கு புனித நீராடி நன்கொடைகளை தாராளமாக வழங்கியதாக அவர்  அதில்  குறிப்பிட்டுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2090623  

**

TS/SV/KPG/DL


(Release ID: 2090714) Visitor Counter : 23