பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

போர்பந்தரில்  இந்திய கடலோரக் காவல்படையின்  ஹெலிகாப்டர்  விபத்தில் சிக்கியது

Posted On: 05 JAN 2025 5:54PM by PIB Chennai

 

இந்திய கடலோர காவல்படையின் ஏஎல்எச் எம்கே-III ரக ஹெலிகாப்டர் குஜராத்தில் உள்ள போர்பந்தர் விமான நிலைய ஓடுபாதையில் ஜனவரி 05, 2025 அன்று சுமார் 1215 மணி அளவில் விபத்துக்குள்ளானது. இந்த  ஹெலிகாப்டர், இரண்டு விமானிகள், ஒரு விமானக் குழு டைவர் ஆகியோருடன் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தது.

விபத்து நடந்த உடனேயே, பணியாளர்கள் மீட்கப்பட்டு போர்பந்தர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு அவர்கள் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டனர். இச்சம்பவத்திற்கான காரணங்கள் விசாரணைக் குழுவினால் ஆராயப்பட்டு வருகின்றன.

விபத்தில் உயிரிழந்த  கமாண்டன்ட் (ஜேஜி) சௌரப், துணை கமாண்டன்ட் எஸ்கே யாதவ் மற்றும் மனோஜ் பிரதான் நேவிக் ஆகியோரின் உடல்கள் சேவை மரபுகள் மற்றும் மரியாதையின்படி தகனம் செய்யப்படும்.

***

PKV/KV


(Release ID: 2090399) Visitor Counter : 29