நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சொத்துக்களை மின்னணு ஏலம் விடுவதற்கான புதுப்பிக்கப்பட்ட 'பாங்க்நெட்' மின்னணு ஏல போர்ட்டலை நிதிச் சேவைகள் துறை செயலாளர் தொடங்கி வைத்தார்

Posted On: 03 JAN 2025 2:22PM by PIB Chennai

நிதி அமைச்சகத்தின் நிதிச் சேவைகள் துறை செயலாளர் திரு எம். நாகராஜு, புதுதில்லியில் இன்று புதுப்பிக்கப்பட்ட மின்னணு ஏல இணையதளமான 'பாங்க்நெட்' -ஐ தொடங்கி வைத்தார்.

இந்தத் தொடக்க விழாவில், கடன் வசூல் மேல்முறையீட்டு தீர்ப்பாயங்களின் தலைவர்கள், கடன் வசூல் தீர்ப்பாயங்களின் தலைமை அதிகாரிகள், பொதுத்துறை வங்கிகளின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரிகள், இந்திய வங்கி சங்கத்தின் துணை தலைமை நிர்வாக அதிகாரி, பொதுத்துறை வங்கிகளின் மூத்த நிர்வாகிகள் மற்றும் நிதிச் சேவைகள் துறையின்  மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்தத் தளம் அனைத்து பொதுத்துறை வங்கிகளிலிருந்தும் மின்-ஏல சொத்துக்கள் பற்றிய தகவல்களை ஒருங்கிணைப்பதுடன், வாங்குபவர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் பரந்த அளவிலான சொத்துக்களைக் கண்டறிய ஒற்றை இடத்தை வழங்குகிறது. பட்டியல்களில் குடியிருப்புகள், வீடுகள், மனைகள் போன்ற குடியிருப்பு சொத்துக்கள், வணிகச் சொத்துக்கள், தொழில்துறை நிலம் மற்றும் கட்டிடங்கள், கடைகள், வாகனங்கள், ஆலை மற்றும் இயந்திரங்கள், விவசாயம் மற்றும் விவசாயம் அல்லாத நிலம் ஆகியவை அடங்கும். இந்த விவரங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் சேகரிப்பதன் மூலம், சொத்து மின்-ஏலங்களைக் கண்டுபிடித்து பங்கேற்பதற்கான செயல்முறையை இது எளிதாக்குகிறது. இது வாங்குபவர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் மதிப்புமிக்க வாய்ப்புகளை அடையாளம் காண்பதை எளிதாக்குகிறது.

நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு நாகராஜு, இந்தத் தளத்தை அறிமுகப்படுத்துவது பொதுத்துறை வங்கிகளின் மீள வசூலித்தல் செயல்முறைக்கு குறிப்பிடத்தக்க வகையில் உதவும் என்றும், அதன் மூலம் வங்கிகளின் நிதி இருப்புநிலையை மேம்படுத்தும் மற்றும் வணிகங்கள், தனிநபர்களுக்கு கடன் கிடைப்பதை மேம்படுத்தும் என்றும் வலியுறுத்தினார். இந்த முயற்சியில் பொதுத்துறை வங்கிகள், ஐபிபிஐ மற்றும் டிஆர்டி ஆகியவை ஆற்றிய முக்கிய பங்கை திரு நாகராஜு விளக்கினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2089806

***

TS/PKV/RJ/KR


(Release ID: 2089834) Visitor Counter : 86