ஊரக வளர்ச்சி அமைச்சகம்
ஊரக வளர்ச்சித் துறை : 2024 ஆம் ஆண்டில் செயல்பாடுகள்
Posted On:
31 DEC 2024 12:52PM by PIB Chennai
2024ம் ஆண்டில் ஊரக வளர்ச்சித் துறை மேற்கொண்ட சில முக்கிய செயல்பாடுகளும் சில முக்கிய சாதனைகளும்:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம்:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் என்பது திறன்சாரா உடல் உழைப்பினை மேற்கொள்ள விருப்பமுள்ள வயது வந்தோர் உள்ள ஒவ்வொரு ஊரகக் குடும்பத்திற்கும் ஒவ்வொரு நிதியாண்டிலும் குறைந்தது 100 நாட்களுக்கு உத்தரவாதமான ஊதிய வேலைவாய்ப்பை வழங்கும் திட்டமாகும் . இதன் மூலம் நாட்டின் ஊரகப் பகுதிகளில் உள்ள குடும்பங்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பு மேம்படுத்தப்படுகிறது.
திட்டத்தின் நோக்கங்கள்:
*ஊரகப் பகுதிகளில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவைக்கேற்ப ஒரு நிதியாண்டில் குறைந்தது நூறு நாட்களுக்கு திறன்சாரா உடல் உழைப்பினை வழங்குதல். அதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட தரமான, நீடித்த சொத்துக்களை உருவாக்குதல்;
*ஏழைகளின் வாழ்வாதார ஆதாரத்தை வலுப்படுத்துதல்;
*சமூக உள்ளடக்கத்தை முன்கூட்டியே உறுதி செய்தல்
*பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளை வலுப்படுத்துதல்
இத்திட்டத்தின் 2024-ம் ஆண்டு சாதனைகள்:
*01.04.2024 முதல் 11.12.2024 வரை) 196.30 கோடி மனித வேலை நாட்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
* மொத்த நிதி விடுவிப்பு - ரூ. 77,491.29 கோடி
* முடிக்கப்பட்ட பணிகளின் எண்ணிக்கை - 61.29 லட்சம்
பிற திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகளும் சாதனைகளும்:
* பிரதமரின் கிராமச் சாலைகள் திட்டத்தின் கீழ், இதுவரை மொத்தம் 1,62,742 குடியிருப்புப் பகுதிகளுக்கு சாலை வசதி வழங்கப்பட்டுள்ளது. இதில் 2024-ம் ஆண்டில் 242 குடியிருப்புகளுக்கு அனைத்து பருவநிலைகளுக்கும் ஏற்ற சாலை இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
*தொலையுணர்வு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புவியியல் தகவல் அமைப்பின் அடிப்படையில் கிராம சுகாதார அமைப்பு அளவிலான திட்டத்தில், மொத்தமுள்ள 2.68 லட்சம் கிராம பஞ்சாயத்துகளில், 2.65 லட்சம் கிராம பஞ்சாயத்துகளுக்கு புவியியல் தகவல் அமைப்பு அடிப்படையிலான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
*யுக்தாரா: ஜிஐஎஸ் அடிப்படையிலான திட்டமிடலை எளிதாக்க, இஸ்ரோ-என்.ஆர்.எஸ்.சி உடன் இணைந்து புவிசார் திட்டமிடல் தளம் யுக்தாரா (Yuktdhara) உருவாக்கப்பட்டுள்ளது.
* ஜியோ எம்என்ஆர்இஜிஏ (GeoMGNREGA): சொத்து உருவாக்கத்தின் "முன்", " உருவாக்கத்தின் போது", "உருவாக்கத்தின் பின்" ஆகிய நிலைகளில் ஜியோ டேக் செய்வதன் மூலம் சொத்துக்களை உருவாக்குவதைக் கண்காணிக்க விண்வெளி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த ஜியோ எம்என்ஆர்இஜிஏ செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை, மொத்தம் 6.13 கோடி சொத்துக்கள் புவிசார் குறியீடு செய்யப்பட்டுள்ளன.
ஜல்தூத் (JALDOOT) செயலி: கிராம ரோஜ்கர் சஹாயக் (GRS) ஆண்டுக்கு இரண்டு முறை பருவமழைக்கு முந்தைய, பருவமழைக்கு பிந்தைய காலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிணறுகளின் நீரை அளவிட உதவுகிறது. நடப்பு நிதியாண்டில் பருவமழைக்கு முந்தைய காலகட்டத்தில் 2.57 லட்சம் கிராமங்களையும், 1.32 லட்சம் கிராம பஞ்சாயத்துகளையும் உள்ளடக்கிய சுமார் 5.84 லட்சம் கிணறுகளின் நீர்மட்ட விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
* அமிர்த சரோவர்: அமிர்த சரோவர் இயக்கம் 2024 ஏப்ரல் 24 அன்று பிரதமரால் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு கிராமப்புற மாவட்டத்திலும் (டெல்லி, சண்டிகர், லட்சத்தீவு தவிர) நாடு முழுவதும் மொத்தம் 75 அமிரத் நீர் நிலைகளைக் கட்ட அல்லது புத்துயிர்ப்பு பெறச் செய்வதற்கான ஒருங்கிணைந்த முயற்சி இதுவாகும். அக்டோபர்- 2024 நிலவரப்படி, 68,000 க்கும் மேற்பட்ட அமிர்த நீர்நிலைகள் கட்டுமானம்/புத்துயிர் நிறைவடைந்துள்ளது.
*மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ், 46,000 க்கும் மேற்பட்ட அமிர்த நீர்நிலைகள் கட்டப்பட்டன அல்லது புத்துயிர்ப்பு பெற்றுள்ளன.
*நேரடி பணப் பரிமாற்றம் (DBT): நிர்வாகத்தில் அதிக வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரவும், முறைகேடுகளைக் குறைக்கவும், ஊதியம் வழங்குவதில் நேரடி பணப் பரிமாற்ற முறை பின்பற்றப்படுகிறது. மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், ஊதியம் மின்னணு முறையில் தொழிலாளர்களின் கணக்குகளில் நேரடி பரிமாற்றம் மூலம் வரவு வைக்கப்படுகிறது.
பிரதமரின் கிராமப் புற வீட்டு வசதித் திட்டம்:
* அடிப்படை வசதிகளுடன் 2.95 கோடி பாதுகாப்பான வீடுகளை வழங்குவதன் மூலம் "அனைவருக்கும் வீடு" என்ற நோக்கத்தை அடைவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அதிகரித்து வரும் வீட்டுவசதி தேவையை பூர்த்தி செய்வதற்காக 2024-25 நிதியாண்டு முதல் 2028-29 நிதியாண்டு வரை கூடுதலாக 2 கோடி கிராமப்புற வீடுகளை கட்ட, இந்த திட்டத்தை நீட்டிக்க மத்திய அமைச்சரவை 9 ஆகஸ்ட் 2024 அன்று ஒப்புதல் அளித்தது.
*30.12.2024 நிலவரப்படி, மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு 3.33 கோடி வீடுகள் ஒதுக்கப்பட்ட ஒட்டுமொத்த இலக்கில், 3.22 கோடி வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, 2.68 கோடி வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
பிரதமரின் ஜன்மன் திட்டம்:
*மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளபடி, பிரதமர்-ஜன்மான் திட்டத்தில் ஊரக மேம்பாட்டு அமைச்சகம் உட்பட மத்திய அரசின் 9 அமைச்சகங்களை உள்ளடக்கிய 11 முக்கிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
*பாதுகாப்பான வீட்டுவசதி, சாலை இணைப்பு, சுத்தமான குடிநீர், சுகாதாரம், கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்து, தொலைத்தொடர்பு இணைப்பு, மின்சாரம், நிலையான வாழ்வாதார வாய்ப்புகள் போன்ற அடிப்படை வசதிகளுடன் பழங்குடியின பகுதிகளை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்
*பிரதமரின் ஜன்மன் திட்டத்தின் கீழ் ஊரக வீட்டு வசதித் திட்டத்தில், 30 டிசம்பர் 2024 நிலவரப்படி, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 3,47,424 வீடுகள் அனுமதிக்கப்பட்டு, 70,905 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
லட்சாதிபதி சகோதரி முன்முயற்சி:
*இந்த முயற்சியின் நோக்கம், பெண்கள் நிதி ரீதியாக தன்னிறைவு அடைய அதிகாரம் அளிப்பதாகும். இதன் மூலம் 3 கோடி லட்சாதிபதி சகோதரிகளை உருவாக்குவதே குறிக்கோள். இதுவரை நாட்டில் 1.15 கோடி சுய உதவிக் குழு பெண்கள் லட்சாதிபதி சகோதரிகளாக மாறி உள்ளனர்.
----
TS/PLM/KPG/DL
(Release ID: 2089645)
Visitor Counter : 55