ஜவுளித்துறை அமைச்சகம்
ஜவுளி அமைச்சகம் : 2024 ஆம் ஆண்டில் செயல்பாடுகள்
प्रविष्टि तिथि:
01 JAN 2025 4:35PM by PIB Chennai
முதல் தரத்திலான இந்திய பருத்திக்கு தனித்துவ அடையாளத்தை வழங்குவதற்காக கஸ்தூரி காட்டன் இந்தியாவின் வர்த்தக முத்திரையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய ஜவுளி, ஆடைத் தொழில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும், ஏற்றுமதியை அதிகரிப்பதிலும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும், இந்தியாவின் வளமான பாரம்பரியம், கலாச்சாரத்தை வெளிப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்தத் தொழில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதமும், தொழில்துறை உற்பத்தியில் 10 சதவீதமும், நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் 8.21 சதவீதமும் பங்களிக்கிறது. உலக ஜவுளி ஏற்றுமதியில் 3.91 சதவீத பங்களிப்புடன் ஜவுளி ஏற்றுமதியில் இந்தியா ஆறாவது பெரிய நாடாக உள்ளது. உள்நாட்டு ஜவுளி, ஆயத்த ஆடை உற்பத்தி 175.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். இத்துறையின் (2023-24) ஏற்றுமதி 35.87 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
ஜவுளித் துறை அதிக தொழிலாளர்கள் தேவைப்படும் துறையாகும். ஒட்டுமொத்தமாக இந்தத் துறை 45 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு நேரடி வேலைவாய்ப்பை வழங்குகிறது. இதில் ஏராளமான பெண்கள், கிராமப்புற மக்கள் உள்ளனர். இது விவசாயத்திற்கு அடுத்தபடியாக நாட்டிலேயே இரண்டாவது பெரிய வேலைவாய்ப்பை உருவாக்கும் துறையாக உள்ளது. உற்பத்திக்கான இந்தியா, திறன் இந்தியா, மகளிருக்கு அதிகாரமளித்தல், ஊரக இளைஞர் வேலைவாய்ப்பு, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி போன்ற மத்திய அரசின் ஒட்டுமொத்த நோக்கங்களை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.
பருத்தித் துறை:
2024-ம் காலண்டர் ஆண்டில், சந்தை நிலவரம் காரணமாக பருத்திகளின் சராசரி விலை குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தின் கீழ் இருந்தன. பருத்தி விவசாயிகளுக்கு உதவிடும் வகையில், இந்திய பருத்தி நிறுவனம் 2024-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் பருத்தி கொள்முதலில் குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயித்துள்ளது. ஏற்கனவே குறைந்தபட்ச ஆதரவு விலையின் அடிப்படையில் 16,215 கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 42.11 லட்சம் பேல்களை 22.12.2024 வரை மத்திய அரசு கொள்முதல் செய்துள்ளது. பருத்தியின் மொத்த உற்பத்தி ஒரு சதவீதமாக உள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2089306
***
TS/SV/AG/DL
(रिलीज़ आईडी: 2089397)
आगंतुक पटल : 146