நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2024-ம் ஆண்டில் நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரத்துறையின் செயல்பாடுகள்

Posted On: 01 JAN 2025 2:26PM by PIB Chennai

பணப் பரிமாற்ற ஒப்பந்தம் சார்க் நாடுகளுக்கான புதிய கட்டமைப்பு:

2024-ம் ஆண்டில், நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை (DEA) நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை, உலகளாவிய பரிவர்த்தனை  நடவடிக்கைகளுக்கான  செயல்பாடுகளை மேற்கொண்டது. சார்க்  அமைப்பில் உள்ள நாடுகளுக்கிடையில் புதிய  பணப்பரிமாற்ற  வசதிக்கான   கட்டமைப்பை ஏற்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தக் கட்டமைப்பில் 25,000 கோடி  ரூபாய் மதிப்பிலான  இந்திய ரூபாயின்  சில்லரை பரிவர்த்தனைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இது அமெரிக்க டாலர் / யூரோ  பரிவர்த்தனைகளுக்கான கட்டமைப்புடன் இணைந்து செயல்படும். இத்தகைய நடவடிக்கைகள் இந்திய ரூபாயின் உலகளாவிய பரிமாற்றத்தை ஊக்குவிக்கும்.

இந்தியா- உஸ்பெகிஸ்தான், இந்தியா-குவைத் நாடுகளுக்கிடையிலான நிதி சார் ஒப்பந்தங்கள்

முதலீட்டாளர்களின்  நம்பிக்கையை உறுதிசெய்யும் வகையிலும், பொருாளதார ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையிலும், இந்தியா- உஸ்பெகிஸ்தான்  நாடுகளிடையே நிதி சார் ஒப்பந்தம் கையெழுத்தானது. முதலீட்டாளர்கள் பாதுகாப்பு, நிதி சார் சிக்கல்களுக்கான தீர்வுகள் ஆகியவற்றுக்கு இந்த ஒப்பந்தம் வகைசெய்கிறது. இந்தியா-குவைத்  நாடுகளிடையே முதலீட்டு பணிக்குழு உருவாக்கம் இவ்விரு நாடுகளுக்கிடையேயான நிதி பரிவர்த்தனைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உறுதிசெய்யும் வகையில் பல்வேறு வர்த்தக நடவடிக்கைகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது. தேசிய முதலீட்டாளர் நல நிறுவனம், மாநிலங்களுக்கிடையே நிதி சார் ஒத்துழைப்பையும், பொருளாதார வளர்ச்சிக்கான நடவடிக்கைகளையும் ஊக்குவிக்கிறதுமேலும், அந்நிய நேரடி முதலீடு தொடர்பான  விதிமுறைகளில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்வதன் மூலம்  அதன் செயல்பாடுகள் எளிமைப்படுத்தப்பட்டு, தடையற்ற பொருளாதார மேலாண்மை நடவடிக்கைகளை உறுதிசெய்கிறது.

 

  • சார்க்  அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கிடையேயான புதிய பண பரிமாற்றத்திற்கான ஒப்பந்தம் 2024-27 
  • இந்தியா-உஸ்பெகிஸ்தான், இந்தியா-குவைத்  நாடுகளிடையேயான இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தங்கள் 
  • நிலையான பொருளாதார ஒத்துழைப்பு, முதலீட்டு பாதுகாப்பு தொடர்பான நெறிமுறைகளில் முன்னேற்றம்

2024-ம் ஆண்டில் மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை மேற்கொண்ட முக்கிய நடவடிக்கைகள் சர்வதேச அளவிலான  பொருளாதார வளர்ச்சியில் புதுமையான முயற்சிகளுக்கு உத்வேகம் அளித்தன. சார்க் அமைப்பின்  உறுப்பு நாடுகளுடன் பொருளாதார  ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள், பிற நாடுகளுடன்  இணைந்து செயல்படுவதற்கான  நடவடிக்கைகள் மூலம் இந்தியா தனது பொருளாதார வளர்ச்சியை விரிவுபடுத்தியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2089236

***

TS/SV/AG/KR

 


(Release ID: 2089343) Visitor Counter : 43