புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அபிவிருத்தி முகமை யின் 2025-ம் ஆண்டுக்கான தொலைநோக்கு பார்வை: சந்தைப்படுத்துதலில் புத்தாக்கங்கள், சில்லறை விற்பனைக்கான ஊக்கம், உலகளாவிய விரிவாக்கம்
Posted On:
01 JAN 2025 12:46PM by PIB Chennai
2025-ம் ஆண்டு புத்தாண்டு தினத்தையொட்டி, இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமையின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான திரு பிரதீப் குமார் தாஸ், அனைத்து தொழிலாளர்களிடமும் காணொளி காட்சி மூலம் உரையாற்றினார். அந்நிறுவனத்தின் நிதித்துறை இயக்குநர் டாக்டர் பிஜய் குமார் மொஹந்தி, தலைமை ஊழல் கண்காணிப்பு அதிகாரி திரு அஜய் குமார் சஹானி மற்றும் மூத்த அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்திக்கான நிதியுதவி குறித்த நடவடிக்கைகளில் இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை நம்பிக்கை கொண்டுள்ளதாக திரு தாஸ் தெரிவித்துள்ளார். பசுமை அமோனியா, நீர்மின் திட்டங்கள், சூரிய சக்தி உற்பத்திக்கான தகடுகள் பிரதமரின் வேளாண் எரிசக்தி பாதுகாப்பு, மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் உற்பத்தி திட்டங்களுக்கு சந்தை ஆதரவை வழங்குவதன் மூலம் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதில் இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமையின் செயல்பாட்டை அவர் எடுத்துரைத்தார்.
இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் விரிவாக்க நடவடிக்ககள் குறித்து எடுத்துரைத்த திரு தாஸ், அந்நிய செலாவணி நிதியுதவி மூலம் பசுமை ஹைட்ரஜன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்திக்கான உபகரணங்கள் தயாரிப்பதை ஊக்குவிக்கிறது என்று கூறினார். வீடுகளின் மேற்கூரைகளில் சூரிசக்தி தகடுகள் அமைக்கும் பிரதமரின் திட்டம், பிரதமரின் வேளாண் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களின் கீழ் சில்லறை வர்த்தகத்தை மேம்படுத்துவதிலும் மின்சார வாகனங்கள், எரிசக்தி சேமிப்பு, பசுமை தொழில்நுட்பங்கள், திறன் உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் வளர்ந்து வரும் பிரிவுகளிலும் கவனம் செலுத்தும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2089202
***
TS/SV/AG/KR
(Release ID: 2089269)
Visitor Counter : 40