பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நீலகிரி, சூரத், வாக்ஷீர் ஆகிய 3 கப்பல்களை இயக்க இந்திய கடற்படை தயாராகி வருகிறது

Posted On: 01 JAN 2025 12:53PM by PIB Chennai

2025 ஜனவரி 15  இந்திய வரலாற்றில் ஒரு முக்கிய நாளாக அமைய உள்ளது.  திட்டம் 17 ஏ-வின்  கண்டறிய முடியாமல் ரகசியமாக பயணிக்கும் பக்கத் துணை போர்க்கப்பலான நீல்கிரிதிட்டம் 15 பி-யின்  கண்டறிய முடியாமல் ரகசியமாக பயணிக்கும் தாக்கி அழிக்கும் பிரிவின் நான்காவது மற்றும் இறுதி கப்பலான சூரத் மற்றும் ஸ்கார்பீன் பிரிவு திட்டத்தின் ஆறாவது மற்றும் இறுதி நீர்மூழ்கிக் கப்பலான வாக்ஷீர்  ஆகிய மூன்று முன்னணி கப்பல்கள் கப்பல் படையில் சேவையில் ஜனவரி 15 இல் இணைகின்றன.

இந்த வரலாற்று நிகழ்வு இந்திய கடற்படையின் போர் திறனுக்கு குறிப்பிடத்தக்க ஊக்கத்தை அளிக்கும் அதே வேளையில், உள்நாட்டிலேயே கப்பல் கட்டுவதில் நாட்டின் தலைசிறந்த தொழில் திறன் நிலையை அடிக்கோடிட்டும் காட்டுகிறது.இந்த மூன்று கப்பலகளும் மும்பையில் உள்ள மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளன, இது பாதுகாப்பு உற்பத்தியின் முக்கியமான களத்தில் இந்தியாவின் வளர்ந்து வரும் சுயசார்புக்கு ஒரு சான்றாகும். இந்த மேம்பட்ட போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களின் வெற்றிகரமான இயக்கம், போர்க்கப்பல் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தில் ஏற்பட்டுள்ள விரைவான முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுகிறது, இது பாதுகாப்பு உற்பத்தியில் உலகளாவிய தலைமையகமாக இந்தியாவின் நிலையை உறுதிப்படுத்துகிறது.

நீலகிரி, சூரத் மற்றும் வாக்ஷீர் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த இயக்கமானது பாதுகாப்பு, தற்சார்பு மற்றும் உள்நாட்டு கப்பல் கட்டுதல் ஆகியவற்றில் இந்தியாவின் இணையற்ற முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுகிறது.

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்தர்ப்பம் கடற்படையின் கடல்சார் வலிமையை மேம்படுத்துவது மட்டுமின்றி, பாதுகாப்பு உற்பத்தி, தற்சார்பு ஆகியவற்றில் நாட்டின் குறிப்பிடத்தக்க சாதனைகளையும் அடையாளப்படுத்துகிறது. இது இந்திய கடற்படைக்கும் ஒட்டுமொத்தமாக தேசத்திற்கும் பெருமையான தருணமாகும், இது ஒரு வலுவான மற்றும் தன்னிறைவு பாதுகாப்பு சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்துகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2089205

***

(Release ID: 2089205)

TS/SMB/RR/KR

 


(Release ID: 2089252) Visitor Counter : 38