உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2024-ம் ஆண்டில் உணவு பதனப்படுத்தும் தொழில்கள் அமைச்சகத்தின் சாதனைகளும் முன்முயற்சிகளும்

Posted On: 27 DEC 2024 2:30PM by PIB Chennai

விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பதிலும் பண்ணை சாரா வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் வேளாண் மற்றும் அது சார்ந்த துறைகளின் உற்பத்தியில் அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளைக் குறைப்பதிலும் பாதுகாப்பு, பதனப்படுத்துவதற்கான  உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதில் பண்ணை சாரா  முதலீடுகள் செய்வதிலும் உணவு பதனப்படுத்தும் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. அதன்படி, உணவு பதனப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம் நாட்டில் உணவு பதனப்படுத்தும் துறையின் வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த அமைச்சகம் சார்பில் கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சாதனைகள் பின்வருமாறு:

வேளாண் விளைபொருட்களின் ஏற்றுமதியில் பதனப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் ஏற்றுமதி 2014-15-ம் ஆண்டில் 13.7% ஆக இருந்த நிலையில், 2023-24-ம் ஆண்டில் 23.4% ஆக அதிகரித்துள்ளது.

தொழில்துறையில் வருடாந்திர ஆய்வு அறிக்கையின்படி,உற்பத்தித் துறையில்  2022-23-ம் ஆண்டின் 12.41% வேலைவாய்ப்புடன் உணவு பதனப்படுத்தும் துறை மிகப்பெரிய வேலைவாய்ப்பு வழங்கும் துறையாக உள்ளது.

ஜனவரி 2024 முதல், பிரதமரின் நுண்ணிய உணவுப் பதனப்படுத்தும்  முறைப்படுத்தல் திட்டத்தின் மானியத்துடன் கூடிய கடனுதவி யின் கீழ் மொத்தம் 46,643 கடன்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2088362

***

TS/SV/KPG/KV/DL


(Release ID: 2088447) Visitor Counter : 39


Read this release in: English , Urdu , Hindi