மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் : 2024 ஆம் ஆண்டில் செயல்பாடுகள் (பகுதி-1)

Posted On: 27 DEC 2024 9:52AM by PIB Chennai

 

2024-ஆம் ஆண்டில், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான முக்கிய முயற்சிகளை வழிநடத்தியதுடன்  செயற்கை நுண்ணறிவு, சைபர் பாதுகாப்பு மற்றும் திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்தியது. இந்த முயற்சிகள் தொழில்நுட்பத்தை அணுகக்கூடியதாக மாற்றுவதையும், புதுமைகளை மேம்படுத்துவதையும், உலகளாவிய தொழில்நுட்ப அரங்கில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

செமிகான் இந்தியா திட்டத்தின் கீழ் குறைக்கடத்தி உற்பத்தி

இந்தியாவில் குறைக்கடத்தி உற்பத்தி பிரிவை ரூ. 91,526 கோடி முதலீட்டில் அமைப்பதற்கான டாடா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட்-இன் முன்மொழிவு பிப்ரவரி 2024 இல் அங்கீகரிக்கப்பட்டது.  இந்தியாவில் அவுட்சோர்ஸ் செமிகண்டக்டர் அசெம்பிளி மற்றும் டெஸ்ட் (ஓ.எஸ்.ஏ.டி) வசதியை ரூ. 27,120 கோடி முதலீட்டில் அமைப்பதற்கான டாடா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட்-இன் திட்டம், பிப்ரவரி 2024 இல் அங்கீகரிக்கப்பட்டது. இந்த வசதி ஒரு நாளைக்கு 48 மில்லியன் உற்பத்தி திறன் கொண்ட உள்நாட்டு குறைக்கடத்தி பேக்கேஜிங் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும். இந்தியாவில் ரூ. 7,584 கோடி முதலீட்டில் ஓ.எஸ்.ஏ.டி வசதியை அமைப்பதற்கான சி.ஜி பவர் மற்றும் இண்டஸ்ட்ரியல் சொல்யூஷன்ஸ் லிமிடெட்-இன் முன்மொழிவும் பிப்ரவரி 2024 இல் அங்கீகரிக்கப்பட்டது. இந்த வசதி அமெரிக்காவிலுள்ள ரெனேசாஸ் எலக்ட்ரானிக்ஸ் அமெரிக்கா நிறுவனம் மற்றும்  தாய்லாந்தின் ஸ்டார்ஸ் மைக்ரோ எலக்ட்ரானிக் நிறுவனம் ஆகியவற்றுடன் கூட்டு முயற்சியாக அமைக்கப்படும்.

இந்தியா ஏ.ஐ இயக்கம்

தேசிய ஏ.ஐ  தளத்தின் (INDIAai) வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் பயன்படுத்தல்:

இந்தத் தளம்  மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், தேசிய மின்-ஆளுமைப் பிரிவு மற்றும் நாஸ்காம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும். இது, நாட்டை செயற்கை நுண்ணறிவு சார்ந்த எதிர்காலத்திற்கு தயார்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில்  செயற்கை நுண்ணறிவு தொடர்பான மேம்பாடுகள், வளங்களைப் பகிர்தல்புத்தொழில் நிறுவனங்களின் விவரங்கள்செயற்கை நுண்ணறிவில் முதலீட்டு நிதிகள், இந்தியாவில்  செயற்கை நுண்ணறிவு தொடர்பான நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் போன்றவற்றுக்கான அனைத்தையும் கொண்ட ஒற்றை பயன்பாட்டு  வலைத்தளமாக இது செயல்படுத்தப்பட்டுள்ளது.

ஏ.ஐ ஆராய்ச்சி பகுப்பாய்வு மற்றும் அறிவுப் பரவல் தளத்திற்கான கருத்தாக்கச் சான்று :

செயற்கை  நுண்ணறிவு ஆராய்ச்சி மற்றும் அறிவு ஒருங்கிணைப்புக்கான பொதுவான கணக்கீட்டு தளத்தை வழங்குவதற்காக  இந்தத் திட்டத்தை அரசு  தொடங்கியுள்ளது. இந்த கம்ப்யூட்டிங் உள்கட்டமைப்பு, அனைத்து தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மையங்கள், ஆராய்ச்சி ஆய்வகங்கள், அறிவியல் சமூகம், தொழில்துறைபுத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தேசிய அறிவுசார்  வலைப்பின்னலின் கீழ் உள்ள நிறுவனங்கள் ஆகியவற்றால் பயன்படுத்தப்படும்.

நாட்டில் ரோபாட்டிக்ஸ் சூழலியலை மேம்படுத்துவதற்கு அமைச்சகங்களுக்கு இடையேயான குழுவை உருவாக்குதல்:

தொலைத்தொடர்புத் துறை, அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சித் துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைதொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறை மற்றும் நிதி ஆயோக் ஆகியவற்றின் செயலர்களைக் கொண்ட  அமைச்சகங்களுக்கு இடையேயான ஒரு குழுவை அமைச்சகம் உருவாக்கியுள்ளது. அமைச்சகத்தின் செயலாளர்  இதன்  ஒருங்கிணைப்பாளராகச்  செயல்படுவார். உள்நாட்டு ரோபாட்டிக்ஸ் தொழிலை ஆதரிப்பதில் அரசின் பங்கு பற்றிய சிறந்த நடைமுறைகளை இந்தக் குழு ஆய்வு செய்யும் மற்றும் ஆராய்ச்சி, வடிவமைப்பு, உற்பத்தி, முன்மாதிரி மற்றும் உற்பத்தியில் பயன்படுத்துதல் உள்ளிட்ட ரோபாட்டிக்ஸை மையமாகக் கொண்ட சூழலை வளர்ப்பதற்கான ஒரு வழியை பரிந்துரைக்கும். இந்த ஆவணம் பொதுமக்களின் கருத்துக் கேட்புக்காக முன்வைக்கப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவுக்கான தேசிய திட்டம்:

இந்தியா ஏ.ஐ திட்டமானது, சமூகத் தாக்கத்திற்கான உள்ளடக்கம், புதுமை மற்றும் பயன்பாடு ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான உருமாற்ற தொழில்நுட்பங்களை பேணுவதற்காக  அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட ஒரு முன்னோடி திட்டமாகக் கருதப்படுகிறது.  செயற்கை நுண்ணறிவு தரவு, திறன்செயற்கை நுண்ணறிவு நெறிமுறைகள் மற்றும் ஆளுகைசெயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவை இதில்  அடங்கும்.

செயற்கை நுண்ணறிவுக்கான உலகளாவிய கூட்டாண்மை (ஜி.பி.ஏ.ஐ)

செயற்கை நுண்ணறிவுத் துறையில் முன்னணியில் இருக்கும் மிகப்பெரிய உலகளாவிய தெற்குப் பொருளாதாரங்களில் ஒன்றாக, ஜி.பி.ஏ.ஐ-இன் பொறுப்பு ஏற்க இருக்கும் கவுன்சில் தலைமைப் பதவிக்கு இந்தியா தன்னைப் பரிந்துரைத்தது. இந்தியா, முதல் முன்னுரிமை வாக்குகளில் மூன்றில் இரண்டு பங்குக்கு மேல் பெற்றதால், நவம்பர் 2022 இல் பொறுப்பு ஏற்க இருக்கும் கவுன்சில் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்தியா 2023 இல் புதிய தலைவராகவும், பின்னர் 2024 இல் தலைமைத் தலைவராகவும், 2025 இல் வெளியேறும் தலைவராகவும் பணியாற்றும். ஜி.பி.ஏ.ஐ அமைச்சர்கள் குழுவின் 6வது கூட்டம் ஜூலை 3, 2024 அன்று புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில்  நடைபெற்றது.

டிஜிட்டல் இந்தியா பாஷினி: மொழி மொழிபெயர்ப்பு தளம்

ஒவ்வொரு குடிமகனும் தங்கள் சொந்த மொழியில் டிஜிட்டல் சேவைகளை சிரமமின்றி அணுகிப் பெறுவதை உறுதி செய்யும் வகையில், மொழித் தடைகளைத் தாண்டிச் செல்வதை பாஷினி நோக்கமாகக் கொண்டுள்ளது. குரலை ஒரு ஊடகமாகப் பயன்படுத்துவதால், மொழி மற்றும் டிஜிட்டல் பிரிவைக் கட்டுப்படுத்தும் ஆற்றலை பாஷினி கொண்டுள்ளது. ஜூலை 2022 இல் தேசிய மொழி தொழில்நுட்ப இயக்கத்தின் கீழ் பிரதமரால் தொடங்கப்பட்ட  இந்த தளம்,  22 திட்டமிடப்பட்ட இந்திய மொழிகளில் தொழில்நுட்ப மொழிபெயர்ப்பு சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பாஷினியின் பங்களிப்புகள் பல்வேறு மன்றங்களில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஏ.ஐடிஜிட்டல் மாற்றம் மற்றும் அனைவரையும் உள்ளடக்குதல் ஆகியவற்றில் தலைமைத்துவத்தைக் காட்டுகின்றன.

தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் இயக்கம்

செப்டம்பர் 26 அன்று, பிரதமர், மூன்று பரம் ருத்ரா சூப்பர் கம்ப்யூட்டர்களை  காணொலிக் காட்சி மூலம் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் இயக்கத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இந்த சூப்பர் கம்ப்யூட்டர்கள், புதுதில்லியில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான முடுக்கி மையம், புனேவில் உள்ள தேசிய ரேடியோ ஆஸ்ட்ரோபிசிக்ஸ் மையத்தின் ஜெயண்ட் மெட்ரேவேவ் ரேடியோ டெலஸ்கோப்  மற்றும் கொல்கத்தாவில் உள்ள  எஸ்.என்.போஸ் தேசிய அடிப்படை அறிவியல் மையத்தில்  நிறுவப்பட்டுள்ளன.  இந்த சூப்பர் கம்ப்யூட்டர்கள் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட மென்பொருள் அடுக்குடன், "ருத்ரா" என அழைக்கப்படும், உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட மற்றும் தயாரிக்கப்பட்ட உயர் செயல்திறன் கம்ப்யூட்டிங் சேவையகங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்படுகின்றன. பரம் ருத்ரா சூப்பர் கம்ப்யூட்டர்கள் இந்தியாவில் உள்ள இளம் விஞ்ஞானிகளுக்கான ஆராய்ச்சி திறன்களை கணிசமாக மேம்படுத்தும், இயற்பியல், பூமி அறிவியல் மற்றும் அண்டவியல் ஆகியவற்றில் மேம்பட்ட ஆய்வுகளை எளிதாக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2088268

***

TS/BR/KV

 

 


(Release ID: 2088351) Visitor Counter : 123