மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
தேசிய மின்-ஆளுகை பிரிவு மற்றும் இந்திய துறைமுகங்கள் சங்கம் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியாவின் கடல்சார் துறையில் டிஜிட்டல் மாற்றத்தை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது
Posted On:
26 DEC 2024 6:59PM by PIB Chennai
தேசிய மின்-ஆளுகை பிரிவும் இந்திய துறைமுகங்கள் சங்கமும் 2024, டிசம்பர் 24 அன்று புதுதில்லியில் ஒரு முக்கியமான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்திய துறைமுகங்கள் சங்க நிர்வாக இயக்குநர் (ஐடி) டாக்டர் அரவிந்த் பிசிகர், தேசிய மின்-ஆளுமை பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி திரு ரஜ்னிஷ் குமார் மற்றும் அந்தந்த குழுக்கள் முன்னிலையில் தேசிய மின்-ஆளுகை பிரிவின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு நந்த் குமாரும் இந்திய துறைமுகங்கள் சங்க நிர்வாக இயக்குநர் திரு விகாஸ் நர்வாலும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், சரக்கு போக்குவரத்து அமைப்புகளை ஒழுங்குபடுத்துதல், செயல்பாட்டு திறனை மேம்படுத்துதல், துறைமுக சூழல் அமைப்பை நவீனப்படுத்துதல் ஆகியவற்றுக்கான வலுவான கட்டமைப்பை நிறுவுகிறது. மேம்பட்ட மென்பொருள் மேம்பாடு, கணினி ஒருங்கிணைப்பு, திறன் மேம்பாடு, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வது ஆகியவை கவனம் செலுத்தப்படும் முக்கிய பகுதிகளாகும்.
தடையற்ற ஒருங்கிணைப்பு மற்றும் பங்குதாரர் ஒத்துழைப்பை வளர்ப்பதன் மூலம் நவீன தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் கடல்சார் டிஜிட்டல் சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான கூட்டு உறுதிப்பாட்டை இந்த முன்முயற்சி பிரதிபலிக்கிறது.
இந்த ஒத்துழைப்பு இந்தியா முழுவதும் உள்ள துறைமுகங்கள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு, செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கும், பணி நிறைவு செய்யப்படும் நேரத்தைக் குறைப்பதற்கும், விநியோகத் தொடர் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் நிகழ்நேர தரவு மற்றும் பகுப்பாய்வுகளை மேம்படுத்தும் எதிர்காலத்தை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியாவின் கடல்சார் திறன்களை வலுப்படுத்துகிறது. துறைமுக நடவடிக்கைகளின் டிஜிட்டல் மாற்றத்தில் உலகளாவிய தலைமையிடத்துக்கு மாறுவதற்கான தேசிய பார்வையுடன் ஒத்துப்போகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2088196
***
TS/SMB/AG/DL
(Release ID: 2088226)
Visitor Counter : 58