பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நவீன தொழில்நுட்ப உதவியுடன் கிராமப்புற நில அளவை, வரைபட தயாரிப்பு சொத்து அட்டைகளை பிரதமர் திரு நரேந்திர மோடி 2024 டிசம்பர் 27 அன்று விநியோகிக்கிறார்

Posted On: 26 DEC 2024 11:46AM by PIB Chennai

நவீன தொழில்நுட்ப உதவியுடன் கிராமப்புற நில அளவை, வரைபட தயாரிப்பு சொத்து அட்டைகளின் வரலாற்றுச் சிறப்புமிக்க மின்னணு விநியோகத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி 2024  டிசம்பர்  27 அன்று காணொலி காட்சி வாயிலாக பிற்பகல் மணி 12.30-க்கு தலைமை தாங்குகிறார்.

இது நாட்டின் கிராமப்புற அதிகாரமளித்தல், நிர்வாக பயணத்தில் ஒரு மைல்கல்லைக் குறிக்கிறது. சத்தீஸ்கர், குஜராத், இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மிசோரம், ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப் பிரதேச மாநிலங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீர், லடாக் ஆகிய 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள சுமார் 50,000 கிராமங்களில் 58 லட்சம் ஸ்வாமித்வா சொத்து அட்டைகள் விநியோகிக்கப்படும். இந்த நிகழ்வு ஸ்வாமித்வா திட்டத்தின் கீழ் 2 கோடிக்கும் அதிகமான சொத்து அட்டைகளை தயாரித்தல், விநியோகித்தல் மற்றும் ஒரே நாளில் 58 லட்சத்துக்கும் அதிகமான சொத்து அட்டைகளை விநியோகித்தல் ஆகியவற்றைக் கடந்து ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும்.

இந்த நிகழ்ச்சியின் போது, மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங், மத்திய பஞ்சாயத்து ராஜ் துறை இணை அமைச்சர் பேராசிரியர் எஸ்.பி.சிங் பாகேல்  மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் செயலாளர் திரு விவேக் பரத்வாஜ் ஆகியோர் முன்னிலையில் நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடுகிறார். இந்த விழாவில் பல்வேறு மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், உயரதிகாரிகள், பஞ்சாயத்து பிரதிநிதிகள் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் காணொலி காட்சி முறையில் கலந்து கொள்வார்கள். சொத்து அட்டைகளின் பிராந்திய விநியோக விழாவை மேற்பார்வையிட நாடு முழுவதும்  நியமிக்கப்பட்ட இடங்களில் இருந்து சுமார் 13 மத்திய அமைச்சர்கள் நேரடியாக இணைவார்கள்.

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகமானது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து ஸ்வாமித்வா திட்டம் குறித்த விழிப்புணர்வை பரவலாக்கும்.

2024 டிசம்பர் 27 அன்று நாடு முழுவதும் சுமார் 20,000 இடங்களில் புத்தாக்க நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.

ஸ்வாமித்வா  திட்டத்தின் கீழ் முக்கிய சாதனைகள்:

ட்ரோன் வரைபட கணக்கெடுப்பு: 3.17 லட்சம் கிராமங்களில் கணக்கெடுப்பு முடிக்கப்பட்டுள்ளது.

சொத்து அட்டை விநியோகம்: 1.49 லட்சம் கிராமங்களில் 2.19 கோடி சொத்து அட்டைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

மேம்படுத்தப்பட்ட ஆளுகை: டிஜிட்டல் முறையில் சரிபார்க்கப்பட்ட சொத்து பதிவுகள் உள்ளாட்சி நிர்வாகத்தை வலுப்படுத்தியுள்ளன மற்றும் கிராம பஞ்சாயத்து மேம்பாட்டுத் திட்டங்களை மேம்படுத்தியுள்ளன.

அனைவரையும் உள்ளடக்கிய நிதிச் சேவைகள் : சொத்து அட்டைகள் கிராமப்புற குடிமக்களுக்கு அதிகாரம் அளித்து, நிறுவனக் கடன்களை அணுக வழிவகுத்துள்ளன.

பெண்களுக்கு அதிகாரமளித்தல்: சொத்துக்களின் சட்டப்பூர்வ உரிமை பெண்களுக்கு மேம்பட்ட நிதி மற்றும் சமூக பாதுகாப்பை வழங்கியுள்ளது.

விவகாரங்களுக்குத் தீர்வு: துல்லியமான சொத்து வரைபடமானது சொத்து விவகாரங்களை கணிசமாகக் குறைத்துள்ளது.

ஸ்வாமித்வா: கிராமப்புற இந்தியாவுக்கு ஒரு முன்னோடித் திட்டம்

பிரதமர் திரு நரேந்திர மோடியால் 2020 ஏப்ரல் 24  அன்று (தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தன்று) தொடங்கப்பட்ட ஸ்வாமித்வா திட்டம், ட்ரோன் மற்றும் ஜிஐஎஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கிராமப்புறங்களில் சொத்து உரிமையாளர்களுக்கு "உரிமைகளின் பதிவு" வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கோவிட்-19 தொற்றுநோயால் முன்னெப்போதும் இல்லாத சவால்கள் ஏற்பட்டு இருந்தபோதிலும், பிரதமர் 2020 அக்டோபர் 11 அன்று சொத்து அட்டைகளின் முதல் தொகுப்பை காணொலி காடசி வாயிலாக விநியோகித்தார், இது இந்த மாற்றத்தக்க முயற்சி அரசின் உறுதிப்பாட்டை நிரூபிக்கிறது. ஸ்வாமித்வா திட்டம் முழு அரசு அணுகுமுறைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. இது சொத்து உரிமையாளர்களுக்கு அதிகாரம் அளித்தது மட்டுமல்லாமல், கிராமப்புற இந்தியாவில் சிறந்த உள்கட்டமைப்பு திட்டமிடல், நிதி ஸ்திரத்தன்மை மற்றும் நிலையான வளர்ச்சியையும் செயல்படுத்தியுள்ளது.

***

(Release ID: 2088027)
TS/IR/RR


(Release ID: 2088052) Visitor Counter : 32