இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
அடல் பிஹாரி வாஜ்பாய்-ன் 100-வது பிறந்த தினத்தை முன்னிட்டு டாக்டர் மன்சுக் மாண்டவியா வாட்நகரில் 'சுஷாசன் பாதயாத்திரை'
Posted On:
23 DEC 2024 5:35PM by PIB Chennai
இந்திய அரசியலமைப்பின் 75-வது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, மத்திய இளைஞர் விவகாரங்கள், விளையாட்டு, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, முன்னாள் பிரதமர் திரு அடல் பிஹாரி வாஜ்பாயின் 100 வது பிறந்த தினத்தை நினைவுகூரும் வகையில் 2024 டிசம்பர் 24 அன்று குஜராத் மாநிலம் வாட்நகரில் நல்ஆளுகை பாதயாத்திரையை (சுஷாசன் பாதயாத்திரை) மேற்கொள்கிறார். பிரதமர் நரேந்திர மோடியின் பிறப்பிடமான வாட்நகர் வரலாற்று முக்கியத்துவத்தை கொண்டுள்ளதுடன், தனித்துவமான கலாச்சார பரிமாணத்தையும் சேர்த்தே கொண்டுள்ளது.
உள்ளூர் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளைச் சேர்ந்த 15,000-க்கும் மேற்பட்ட மை பாரத் இளம் தன்னார்வலர்கள் இந்த பாதயாத்திரையில் பங்கேற்கின்றனர். இந்த வரலாற்று சிறப்புமிக்க பேரணியில் மத்திய, மாநில அரசுகளின் மூத்த அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மை பாரத்தில் பதிவு செய்ய ஊக்குவித்தல்: முற்போக்கான மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான இயக்கத்தில் சேர இளைஞர்களை ஊக்குவித்தல்
தூய்மை மற்றும் தன்னார்வலர்களால் இயக்கப்படும் முயற்சிகள்: இந்த பாத யாத்திரையின் முன்னோட்டமாக, தூய்மை இயக்கங்கள், தொண்டு இயக்கங்கள், மருத்துவ முகாம்கள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் வாழ்க்கை மற்றும் பாரம்பரியத்தைக் கொண்டாடும் வகையிலும், 'வளர்ச்சியடைந்த பாரதத்தை' உருவாக்குவதில் அரசியலமைப்பு விழுமியங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும், கலாச்சார நிகழ்ச்சிகள் இந்த பாதயாத்திரையில் இடம்பெறும்.
***
TS/SV/AG/DL
(Release ID: 2087401)
Visitor Counter : 13