இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

டாக்டர் மன்சுக் மாண்டவியா ‘ஃபிட் இந்தியா சண்டேஸ் ஆன் சைக்கிள்’ முன்முயற்சியைத் தொடங்கி வைத்தார்

Posted On: 22 DEC 2024 1:18PM by PIB Chennai

 

இந்த வார தொடக்கத்தில் மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர்  மன்சுக் மாண்டவியா, 'ஃபிட் இந்தியா சண்டேஸ் ஆன் சைக்கிள்' முன்முயற்சியை இன்று காலை இங்குள்ள மேஜர் தியான் சந்த் நேஷனல் ஸ்டேடியத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

 இந்த நிகழ்வில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை  மற்றும் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் , இந்திய விளையாட்டு ஆணையம் மற்றும்  ஸ்டேடியத்தைச் சேர்ந்த இளம்  உடற்பயிற்சியாளர்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.

சைக்கிள் ஓட்டுதலின் பரவலான தாக்கத்தைப் பற்றி டாக்டர் மன்சுக் மாண்டவியா , “ஃபிட் இந்தியா சண்டேஸ் ஆன் சைக்கிள் முன்முயற்சியானது இந்தியாவில் 1100+ இடங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்படுகிறது. இந்த வார தொடக்கத்தில் தொடங்கப்பட்ட சைக்கிள் ஓட்டுதல்  பற்றிய விழிப்புணர்வை அதிவேகமாக பரப்பியுள்ளது’’ என்றார்.

சைக்கிள் ஓட்டுவது இன்றைய தேவை. வளர்ந்த  பாரதத்தின் பார்வைக்கு ஆரோக்கியமான தனிநபர் தேவை, அவர் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குகிறார், இறுதியில் ஆரோக்கியமான தேசத்தை உருவாக்குகிறார். சைக்கிள் ஓட்டுதலின் நன்மைகள், 2019-ல் மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடியால்  தொடங்கப்பட்ட ஃபிட் இந்தியா இயக்கத்தின் செய்தியை நிலைநிறுத்துகிறது,” என்று  விளையாட்டுத் துறை  அமைச்சர் மேலும் கூறினார்.

தேசிய தலைநகரில் நடந்த நிகழ்வில் சிஆர்பிஎப் மற்றும் ஐடிபிபி-யைச் சேர்ந்த ஏராளமான சைக்கிள் ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர், மேலும் அவர்கள் உடற்பயிற்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இரண்டையும் ஊக்குவிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

 ‘ஃபிட் இந்தியா சண்டேஸ் ஆன் சைக்கிள்இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம், இந்திய சைக்கிள் ஓட்டுதல் கூட்டமைப்பு  மற்றும் மை பாரத் ஆகியவற்றுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது. நாடு முழுவதும் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தின் பிராந்திய மையங்கள், தேசிய சிறப்பு மையங்கள் மற்றும் கேலோ இந்தியா மையங்கள்  ஆகியவற்றில் ஒரே நேரத்தில் நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.

*****

PKV/KV

 

 


(Release ID: 2086978) Visitor Counter : 17