வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
ஆண்டு இறுதி ஆய்வறிக்கை 2024: வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம்
Posted On:
20 DEC 2024 3:29PM by PIB Chennai
இந்த ஆண்டில் (2024) வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் முக்கிய முன்முயற்சிகள்/சாதனைகள்/நிகழ்வுகள் வருமாறு:
15.11.2024 நிலவரப்படி, பொலிவுறு நகர இயக்கத்தின் கீழ், ரூ. 1,64,669 கோடி மதிப்பிலான 8,066 திட்டங்களில் பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் 7,352 திட்டங்கள் (அதாவது மொத்த திட்டங்களில் 91%) ரூ. 1,47,366 கோடி மதிப்பில் முடிக்கப்பட்டுள்ளன என்று 100 பொலிவுறு நகரங்கள் வழங்கிய தரவுகள் தெரிவிக்கின்றன.
100 பொலிவுறு நகரங்களிலும் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையங்கள், 84,000 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள், 1,884 அவசர அழைப்பு பெட்டிகள், 3,000 க்கும் அதிகமான பொது ஒலிபரப்பு அமைப்புகள், 1,740 கி.மீ-க்கும் அதிகமாக பொலிவுறு சாலைகள், 713 கி.மீ சைக்கிள் பாதைகள், 17,026 கி.மீ. நீளமுள்ள குடிநீர் வழங்கல் அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன. 66-க்கும் அதிகமான நகரங்களில் திடக்கழிவு மேலாண்மை செயல்படுத்தப்படுகிறது. அதிக தொழில்நுட்ப பயன்பாட்டுடன், சுமார் 9,194 வாகனங்களில் ரேடியோ அதிர்வெண் அடையாளம் காணும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 9,433-க்கும் அதிகமான நவீன வகுப்பறைகள், 41 டிஜிட்டல் நூலகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 172 இ-சுகாதார மையங்கள் மற்றும் கிளினிக்குகள் உருவாக்கப்பட்டுள்ளன. 152 சுகாதார ஏடிஎம்கள் நிறுவப்பட்டுள்ளன.
கடந்த 6 மாதங்களில் (ஜூன் 9, 2024 முதல்) தூய்மை இந்தியா இயக்கத்தின் சாதனைகள்
அசாம், பீகார், தில்லி, குஜராத், மத்தியப் பிரதேசம், மிசோரம், தமிழ்நாடு, உத்தரபிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய 9 மாநிலங்களில் திடக்கழிவு மற்றும் பயன்படுத்தப்பட்ட நீர் மேலாண்மை மற்றும் திறன் மேம்பாட்டு திட்டங்களுக்காக ரூ .1,123 கோடி மதிப்பிலான திட்டங்களை அரசு வெளியிட்டுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள பிப்லஜ் நகரில் ரூ.375 கோடி மதிப்பில் 15 மெகாவாட் திறன் கொண்ட 1000 மெட்ரிக் டன் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலை நவம்பர் 1 அன்று தொடங்கப்பட்டது.
அம்ருத் 2.0-ன் கீழ், குடிநீர் மற்றும் கழிவுநீர் அமைப்புகளை மேம்படுத்துவதற்கான தொடர்முயற்சிகளுடன், நீர் தேங்கும் சவால்களை எதிர்கொள்ள மழை நீர் வடிகால் அமைப்புகளுக்கு அரசு முன்னுரிமை அளிக்கிறது.
நகர்ப்புற போக்குவரத்து மற்றும் நிலைத்தன்மைக்கான முன்முயற்சிகள்
தில்லி, பெங்களூரு, கொல்கத்தா, சென்னை, கொச்சி, மும்பை, நாக்பூர், அகமதாபாத், காந்திநகர், புனே, கான்பூர், ஆக்ரா, போபால், இந்தூர், பாட்னா, சூரத், மீரட் ஆகிய நாட்டின் பல்வேறு நகரங்களில் சுமார் 998 கிலோமீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டங்கள் (தில்லி-மீரட் ரயில் திட்டத்தின் மீதமுள்ள பகுதி உட்பட) கட்டுமானத்தில் உள்ளன.
2013-14 ஆம் ஆண்டில் சராசரி தினசரி பயணிகளின் எண்ணிக்கை சுமார் 28 லட்சமாக இருந்தது. மெட்ரோ ரயில் கட்டமைப்பு வேகமாக விரிவடைந்து வருவதால், தினசரி சராசரி பயணிகள் எண்ணிக்கை தற்போது 1 கோடியைத் தாண்டியுள்ளது.
நகர்ப்புற வீட்டுவசதி மற்றும் பிரதமரின் வீட்டுவசதித் திட்டம் 2.0
புலம்பெயர்ந்த மக்கள் / பணிபுரியும் பெண்கள் / தொழில்துறை தொழிலாளர்கள் / வீடற்றவர்கள் / மாணவர்கள் மற்றும் பிறருக்கு பயனளிக்கும் வகையில் பிரதமரின் வீட்டுவசதித் திட்டம் 2.0 -ன் கீழ் வாடகை வீட்டுவசதி பிரிவு புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
காலியாக உள்ள வீடுகளை அரசு நிதியுதவியுடன் அரசு மற்றும் தனியார் பங்களிப்பு மூலம் அல்லது பொது முகமைகள் மூலம் குறைந்த வாடகை வீடுகளாக மாற்றுதல், புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட மாநிலங்களின் மக்கள் தொகை அடிப்படையில் திட்டமிடப்பட்ட 1 கோடி நகர்ப்புற வீடுகளில் சுமார் 7% க்கு தற்காலிக அனுமதிகள், சரியான நேரத்தில் ஒதுக்கீடு செய்வதை உறுதி செய்தல் மற்றும் செயல்முறையை விரைவுபடுத்துதல் ஆகிய பணிகள் நடைபெறுகின்றன.
செயல்பாடுகளை நெறிப்படுத்த, வருடாந்தர வீட்டு ஒதுக்கீடுகள் குறித்த தெளிவை வழங்க, மார்ச் 31, 2025 க்குள் பெறப்பட்ட தேவை கணக்கெடுப்பின் அடிப்படையில் மாநிலங்களுக்கான அனுமதிகள் இறுதி செய்யப்படும்.
புதிய தேசிய நகர்ப்புர வாழ்வாதார இயக்கப் பணிகள்- 30 செப்டம்பர் 2024 வரை
9.96 லட்சம் சுய உதவிக் குழுக்களில் 1 கோடிக்கும் அதிகமான நகர்ப்புற ஏழைப் பெண்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு மூலம் 39.39 லட்சத்துக்கும் அதிகமான வாழ்வாதாரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தனிநபர் மற்றும் குழுக்களுக்கு மானிய கடன் வசதி, குறுந்தொழில்கள் அமைப்பது, சேமிப்பு தொகுநிதி அடிப்படையில் சுய உதவிக் குழுக்களை வங்கிகளுடன் இணைப்பது;
1.41 லட்சம் நகர்ப்புற வீடற்றவர்களுக்காக 1,994 நிரந்தர தங்குமிடங்கள் கட்டப்பட்டுள்ளன;
3471 நகரங்களில் கணக்கெடுப்பு மூலம் சுமார் 71.65 லட்சம் தெருவோர விற்பனையாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர், இவர்களில் 38.87 லட்சத்துக்கும் அதிகமான தெருவோர விற்பனையாளர்களுக்கு விற்பனை சான்றிதழ்களும் 32.59 லட்சத்துக்கும் அதிகமான தெருவோர விற்பனையாளர்களுக்கு அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளன.
தீன்தயாள் அந்தியோதயா யோஜனா – தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உதவியாக ரூ.5,733.10 கோடி செலவிடப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2086464
***
TS/SMB/RJ/DL
(Release ID: 2086627)
Visitor Counter : 8