அஞ்சல் துறை இந்த ஆண்டில் குறிப்பிடத்தக்க சாதனைகள், முன்னேற்றங்கள் மற்றும் மைல்கற்களை படைத்துள்ளது. இவை சேவை வழங்கலை மேம்படுத்துவதற்கும் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்பதற்குமான அதன் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கின்றன. 2024-ம் ஆண்டிற்கான முக்கிய முயற்சிகள் மற்றும் முன்னேற்றங்கள் பற்றிய சிறு கண்ணோட்டம்:
அஞ்சல் நிலைய சட்டம் 2023 என்ற புதிய அஞ்சல் சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியது. இது டிசம்பர் 24, 2023 அன்று குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றது. இந்த சட்டம் ஜூன் 18, 2024 அன்று நடைமுறைக்கு வந்தது, இது 1898-ம் ஆண்டின் இந்திய அஞ்சல் நிலைய சட்டத்தை மாற்றியது.
பிஎம்ஏ தொழில்நுட்பம் (பார்சல் கண்காணிப்பு பயன்பாடு) அறிமுகம் நிகழ்நேர விநியோக தகவல் பகிர்வில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. மே 2019 முதல் அக்டோபர் 2024 வரை, கணக்குக்குரிய அஞ்சல் விநியோகம் 4.33 லட்சம் என்ற எண்ணிக்கையிலிருந்து, 5.35 கோடியாக வளர்ச்சியை எட்டியுள்ளது.
இந்தியாவில் 53,854 அஞ்சல் பெட்டிகளின் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தி, அவற்றைக் கண்காணிக்கும் வகையில் மின்னணு ஒப்புதல் வழங்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
பரஸ்பர நிதி முதலீட்டாளர்களுக்கு வீடு வீடாகச் சென்று கேஒய்சி என்னும் உங்கள் வாடிக்கையாளர்களை தெரிந்துகொள்ளுங்கள் என்பதைச் சரிபார்ப்பு சேவைகளை வழங்குவதற்காக யூடிஐ மற்றும் எஸ்யுயுடிஐ உடன் அஞ்சல்துறை புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. அக்டோபர் 2024 நிலவரப்படி, 400,000 கேஒய்சி சரிபார்ப்புகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளன.
பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்ட அலகுகளை சரிபார்ப்பதற்காக அஞ்சல் துறை, காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் (கேவிஐசி) இடையே 20.08.2024 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த சரிபார்ப்பு பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளின் கடன் கணக்கில் அரசு மானியத்தை நேர் செய்ய உதவும். பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் அடிமட்டத்தில் சுயவேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவை ஊக்குவிப்பதற்கான அரசின் முக்கிய முயற்சிகளில் ஒன்றாகும்.
அஞ்சல் தலைகள் மூலம் பாரம்பரியத்தை பாதுகாத்தல்
ஸ்ரீ ராம் ஜன்மபூமி கோயிலின் குடமுழுக்கைக் குறிக்கும் வகையில், பிரதமர் திரு நரேந்திர மோடியால் ஆறு நினைவு அஞ்சல்தலைகள் தொகுப்பு வெளியிடப்பட்டது.
நினைவு அஞ்சல்தலைகள்: 2024 ஜனவரி 1 முதல் 2024 அக்டோபர் 31 வரையிலான காலகட்டத்தில் பல்வேறு ஆளுமைகள், முக்கிய நிகழ்வுகள் / நிகழ்வுகள் / நிறுவனங்கள் / சாதனைகள் மற்றும் நட்பு நாடுகளுடனான கூட்டு வெளியீடுகள் ஆகியவற்றின் பங்களிப்புகளை நினைவுகூரும் வகையில் 25 வெளியீடுகள் குறித்த நினைவு தபால் தலைகள் வெளியிடப்பட்டன.
செப்டம்பர் 20, 2024 அன்று, பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் முதல் ஆண்டு விழாவில், 18 வர்த்தகங்களில் கார்ப்பரேட் மை ஸ்டாம்ப் இந்தியப் பிரதமரால் டிஜிட்டல் முறையில் வெளியிடப்பட்டது.
திறமையான மற்றும் எதிர்காலத்திற்குத் தயாராக உள்ள பணியாளர்களை உருவாக்குதல்
iGOT கர்மயோகி தளத்தில்25 லட்சம் படிப்புகளை நிறைவுசெய்வதன் மூலம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் எட்டப்பட்டுள்ளது. குடிமக்களை மையமாகக் கொண்ட மற்றும் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் பணியாளர்களை இது பயிற்றுவித்துள்ளது.
100 கிராமிய அஞ்சல் சேவகர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி அளித்தது என்பது திறன் மேம்பாட்டு பயிற்சித் திட்டத்தின் தொடக்கமாக அமைந்தது.
அக்டோபர் 29, 2024. அன்று வேலைவாய்ப்பு முகாமின் முதல் கட்டத்தில் 25,133 நபர்கள் பங்கேற்றனர்.
சிறப்பு பிரச்சாரம் 4.0: தூய்மை இந்தியா இயக்கங்களின் விளைவாக 70,000 கோப்புகள் களையெடுக்கப்பட்டன, 80,000 க்கும் மேற்பட்ட குறைகள் தீர்க்கப்பட்டன, 46,000 சதுர அடிக்கும் அதிகமான இடம் விடுவிக்கப்பட்டது மற்றும் ஸ்கிராப் விற்பனையிலிருந்து ரூ .1.15 கோடி வருவாய் கிடைத்தது.
இந்தியா -ஆப்ரிக்கா
அஞ்சல் துறை தலைவர்கள் சந்திப்பு கூட்டம் ஜூன் 21-23 தேதிகளில் நடைபெற்றது. அஞ்சல் துறையில் ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் இந்தியாவின் நிர்வாகங்களுக்கு இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன் இது நடத்தப்பட்டது.
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் நடப்பு ஆண்டில் 2.68 கோடி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் 1.56 கோடி கணக்குகள் அதாவது 59% கணக்குகள் பெண்களின் வங்கி கணக்குகள் ஆகும். இந்தியாவின் கிராமங்களில் 77% கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.
1.04 கோடி வாடிக்கையாளர்கள் மொபைல் பேங்கிங் சேவையைப் பெற்றுள்ளனர்.
69 லட்சம் பேர் விர்ச்சுவல் டெபிட் கார்டு சேவைகளை பயன்படுத்தியுள்ளனர்.
ஏஇபிஎஸ் மூலம் சுமார் 2,600 கோடி வழங்கப்பட்டுள்ளது.
1.56 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 312 கோடி பரிவர்த்தனைகள் யுபிஐ மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஏறக்குறைய 3.62 கோடி ஐ.பி.பி.பீ வாடிக்கையாளர்கள் நேரடி பணப் பரிமாற்ற பலன்களைப் பெற்றுள்ளனர். 20 கோடி நேரடி பணப் பரிமாற்றம் மூலம் ரூ. 34,950 கோடி செலுத்தப்பட்டு உள்ளது.
1.15 கோடி ஆதார் மொபைல் அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன.
***
TS/PKV/AG/KR/DL