குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

மாநிலங்களவை 266-வது கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவரின் நிறைவுரை

Posted On: 20 DEC 2024 1:21PM by PIB Chennai

மாண்புமிகு உறுப்பினர்களே,

எனது நிறைவுரையை முன்வைக்கிறேன்.

நமது அரசியலமைப்புச் சட்டத்தின் 75-வது ஆண்டு நிறைவையொட்டி, இந்தக் கூட்டத்தொடரை நிறைவு செய்யும் வேளையில், ஆழ்ந்த சிந்தனைக்கான தருணத்தையும் நாம் எதிர்கொள்கிறோம். வரலாற்றுச் சிறப்புமிக்க நாடாளுமன்ற வளாகத்தில், அரசியல் சாசன தினத்தை நாம் கொண்டாடியது ஜனநாயக விழுமியங்களை மீண்டும் உறுதிப்படுத்துவதாக இருந்தது.

இந்தக் கூட்டத் தொடரின் அவை நடவடிக்கைகள் 40.03% ஆக இருந்தது. 43 மணிநேரம் 27 நிமிடங்கள் மட்டுமே அவை ஆக்கப்பூர்வமாக நடைபெற்றது.  அவை நடவடிக்கைகள் இடையூறு காரணமாக ஒத்திவைக்கப்படுவதால் மக்களிடமிருந்து கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அவையில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்றியபோதும், இந்தியா-சீனா உறவுகள் குறித்து வெளியுறவு அமைச்சரின் அறிக்கை அளித்தபோதும், அவையில் தொடர்ந்து இடையூறுகள் ஏற்பட்டன. இத்தகைய இடையூறுகள் ஜனநாயக அமைப்புகள் மீது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்படுத்தி வருகின்றன.

நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்படும் பரிசீலனைகள், விதி எண். 267-க்கு முன் ஊடகங்கள் மூலம் அறிவிப்புகளை வெளியிடும் போக்கு அதிகரித்து வருவது அவையின் கண்ணியத்தை குறைத்து மதிப்பிடுவதாக அமைகிறது. அவை நடவடிக்கைகள் ஆக்கப்பூர்வமான விவாதங்களுடன் நடைபெற வேண்டும் என்று நாட்டு மக்கள் அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு நாடாளுமன்ற விவாதங்கள் கண்ணியமாக நடைபெறுவதன் மூலம் ஜனநாயக மாண்புகளை மீட்டெடுக்க முடியும்.

நாடாளுமன்ற துணைத் தலைவர், பொதுச் செயலாளர், ஊழியர்கள் மற்றும் ஊடகங்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது நாட்டிற்கு கண்ணியத்துடனும், அர்ப்பணிப்புடனும் சேவையாற்றுவோம்.

ஜெய் ஹிந்த்.

***

(Release ID: 2086401)
TS/SV/RR/KR

 


(Release ID: 2086461) Visitor Counter : 17