குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் நம்பிக்கை, எதிர்பார்ப்புகளை மதிக்க வேண்டும்: மாநிலங்களவைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர்
Posted On:
20 DEC 2024 11:44AM by PIB Chennai
மாநிலங்களவையில் ஏற்பட்ட அமளிக்கு இடையில், நாடாளுமன்ற நடவடிக்கைகளின் நிலை குறித்து மாநிலங்களவை தலைவர் திரு ஜக்தீப் தன்கர் கவலை தெரிவித்துள்ளார்.
"மாண்புமிகு உறுப்பினர்களே என விளித்து
உலகநாடுகள் நமது ஜனநாயக நடவடிக்கைகளை கவனித்து வருவதாகவும் நாடாளுமன்ற அவை நடவடிக்கைகளுக்கு ஏற்படுத்தும் இடையூறுகள் மக்களின் நம்பிக்கையையும் எதிர்பார்ப்புகளையும் சீர்குலைப்பதாகவும் அவர் கூறினார். மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய கடமையை புறந்தள்ளக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.
ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற வேண்டுமென்றும், கட்சி வேறுபாடின்றி அனைத்து நாடாளுமன்ற உறுப்பினரும் தங்கள் மனசாட்சியின்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
மக்களின் நலனுக்காக சேவை செய்ய வேண்டிய விலைமதிப்பற்ற வாய்ப்புகளை ஒருபோதும் தவறவிட்டுவிடக் கூடாது என்று அவர் கூறினார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களை சுயபரிசோதனை செய்து கொண்டு அவையில் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டுமென்று திரு ஜக்தீப் தன்கர் வலியுறுத்தியுள்ளார்."
***
(Release ID: 2086346)
TS/SV/RR/KR
(Release ID: 2086378)