தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசபக்தி மிகவும் தலையாயது: முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் படேல்

प्रविष्टि तिथि: 19 DEC 2024 3:23PM by PIB Chennai

குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கேரளாவைச் சேர்ந்த அனைத்து பெண் பத்திரிகையாளர்கள் குழு, குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் படேலை இன்று காந்திநகரில் சந்தித்தனர். அப்போது உரையாற்றிய முதலமைச்சர், பிரதமர் திரு நரேந்திர மோடியின்  வளர்ச்சியடைந்த இந்தியா தொலைநோக்கு பார்வையை  நனவாக்க அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். வளர்ச்சியை சாத்தியமாக்க ஒவ்வொரு தரப்பு மக்களும், நிறுவனங்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற "அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்" என்ற கருத்துடன் இது ஒத்துப்போகிறது என்று அவர் கூறினார். பிரதமரின் தலைமையின் கீழ் தூய்மைப் பணித் துறையிலிருந்து  குறைமின்கடத்திகள் வரை பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை சுட்டிக் காட்டிய முதலமைச்சர், ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற யோசனையை ஊடகக் குழுவினர் தங்கள் பயணத்தின் போது உணர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்

தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட பத்திரிகையாளர்கள், குஜராத்தின் வளர்ச்சி குறித்த தகவல் கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகக் கூறினர். இதுபோன்ற சுற்றுப்பயணத்தை ஏற்பாடு செய்த பத்திரிகை தகவல் அலுவலகத்தின் முன்முயற்சிக்கு  நன்றி தெரிவித்த அவர்கள், பல்வேறு தரப்பினரைக் காணவும், கலந்துரையாடவும்உள்ளூர்  கலாச்சாரத்தை அனுபவிக்கவும் இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது என்று கூறினர். ஊடகக் குழு இன்று காந்திநகரில் உள்ள கிப்ட் சிட்டிக்கு சென்றபோது அவர்களுக்கு எதிர்கால திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது.

------

TS/IR/KPG/DL


(रिलीज़ आईडी: 2086196) आगंतुक पटल : 58
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati