மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறையின் 2024-ம் ஆண்டின் முக்கிய செயல்பாடுகள்

Posted On: 19 DEC 2024 4:31PM by PIB Chennai

கால்நடைத் துறை இந்தியாவின் வேளாண் பொருளாதாரத்தை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. 2014-ம் ஆண்டு முதல் இத்துறை 12.99 சதவீதம் என்ற விகிதத்தில் ஆண்டு வளர்ச்சியை  அடைந்து வருகிறது.

  • 2024-ம் ஆண்டிற்கான மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வள அமைச்சகத்தின் சில முக்கிய முயற்சிகள்/ சாதனைகளின் சுருக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
  • உலக பால் உற்பத்தியில் 24.76 சதவீத பங்களிப்பை அளிக்கும் வகையில் இந்தியா பால் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது. 2014-15-ல் 146.31 மில்லியன் டன்னாக இருந்த பால் உற்பத்தி 2023-24-ல் 239.30 மில்லியன் டன்னாக கடந்த 10 ஆண்டுகளில் 5.62% கூட்டு ஆண்டு வளர்ச்சி விகிதத்தில் (CAGR) வளர்ந்து வருகிறது.
  • உணவு, வேளாண் அமைப்பின் தரவுகளின்படி முட்டை உற்பத்தியில் இந்தியா 2வது இடத்திலும், இறைச்சி உற்பத்தியில் 5வது இடத்திலும் உள்ளது. 2014-15 ஆம் ஆண்டில் 78.48 பில்லியனாக இருந்த முட்டை உற்பத்தி 2023-24 ஆம் ஆண்டில் 142.77 பில்லியனாக அதிகரித்துள்ளது. நாட்டில் முட்டை உற்பத்தி கடந்த 10 ஆண்டுகளில் 6.87% கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில் (CAGR) அதிகரித்து உள்ளது.
  • •    உள்நாட்டு கால்நடை இனங்களின் மேம்பாடு, பாதுகாப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டு தேசிய கால்நடை இயக்கம் அரசால் தொடங்கப்பட்டுள்ளது.        2024-ம் ஆண்டில் மாடுகளின் உற்பத்தித்திறனை அதிகரிக்க இத்திட்டத்தின் கீழ் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன:
  • உள்நாட்டில் உருவாக்கப்பட்ட பாலின வகைப்படுத்தப்பட்ட விந்து உற்பத்தி தொழில்நுட்பத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி 5.10.2024 அன்று தொடங்கி வைத்தார்.
  • தேசிய பால் பதிவு திட்டம் 13.9.2024 அன்று புவனேஸ்வரில் தொடங்கப்பட்டது.
  • கால்நடை தயாரிப்புகளுக்கான தளம் குஜராத்தில் 22 அக்டோபர் 2024 அன்று தொடங்கப்பட்டது.
  • பால், பால் பொருட்களின் தரத்தை உயர்த்துதல், பால் கொள்முதல், பதப்படுத்துதல், மதிப்புக் கூட்டுதல், விற்பனை ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு தேசிய பால்வள மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம், 19,010 பால் கூட்டுறவுச் சங்கங்களை உருவாக்கவும் / புத்துயிரூட்டவும், பால் கூட்டுறவுச் சங்கங்களில் 18.17 லட்சம் புதிய விவசாய உறுப்பினர்களைச் சேர்க்கவும், நாளொன்றுக்கு 27.93 லட்சம் லிட்டர் பால் பதப்படுத்தும் திறனை உருவாக்கவும் உதவியுள்ளது.
  • தேசிய கால்நடை இயக்கமானது வேலைவாய்ப்பை உருவாக்குதல், தொழில் முனைவோர் மேம்பாடு, கால்நடைகளின் உற்பத்தித் திறனை அதிகரித்தல் உள்ளிட்ட நோக்கங்களுடன் செயல்படுத்தப்படுகிறது.
  • கால்நடை நோய்களைக் கட்டுப்படுத்தவும், கால்நடை சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் கால்நடை நோய் கட்டுப்பாடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  • தேசிய கால்நடை நோய்க் கட்டுப்பாட்டுத் திட்டம் 2019-ல் தொடங்கப்பட்டது. 2024-ம் ஆண்டில் மேய்ச்சல் செம்மறி ஆடுகள், வெள்ளாடுகளை உள்ளடக்கும் வகையில் தடுப்பூசி திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
  • நடமாடும் கால்நடை மருத்துவப் பிரிவுகள் மூலம் 62.24 லட்சம் விவசாயிகள், 131.05 லட்சம் கால்நடைகள் பயனடைந்துள்ளனர்.
  • கால்நடை கணக்கெடுப்பு, ஒருங்கிணைந்த மாதிரி கணக்கெடுப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

***

TS/PLM/AG/DL


(Release ID: 2086168) Visitor Counter : 113