கனரகத் தொழில்கள் அமைச்சகம்
2024-ம் ஆண்டில் கனரகத் தொழில்கள் அமைச்சகத்தின் முக்கிய செயல்பாடுகள்
Posted On:
19 DEC 2024 12:29PM by PIB Chennai
2024-ம் ஆண்டில் கனரகத் தொழில்கள் அமைச்சகத்தின் சில முக்கிய முன்முயற்சிகள், சாதனைகள்:
- ஆட்டோமொபைல், வாகன பாகங்கள் தொழிலுக்கான உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டம், ரூ. 25,938 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படுகிறது.
- 11,500 கோடி ரூபாய் செலவில் 2019-ல் தொடங்கப்பட்ட இரண்டாம் கட்ட ஃபேம் (FAME)திட்டம், மின்சார வாகனங்கள், பொது சார்ஜிங் நிலையங்கள் ஆகியவற்றை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2024 அக்டோபர் 31 நிலவரப்படி மொத்தம் 16.15 லட்சம் மின்சார வாகனங்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கப்பட்டுள்ளது.
- 2024 செப்டம்பர் 29 அன்று அறிவிக்கப்பட்ட பிரதமரின் இ-டிரைவ் திட்டம், மொத்தம் ரூ. 10,900 கோடி செலவில், 2024 அக்டோபர் 1 முதல் 2026 மார்ச் 31 வரை செயல்படுத்தப்படுகிறது. பசுமைப் போக்குவரத்தை ஊக்குவிப்பதற்கும் மின்சார வாகன உற்பத்தி சூழல் அமைப்பை மேம்படுத்துவதற்கும் இது செயல்படுத்தப்படுகிறது.
- 2024 மார்ச் 15 அன்று அறிவிக்கப்பட்ட மின்சார பயணிகள் கார்கள் (SMEC) உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான திட்டம், உலகளாவிய முதலீடுகளை ஈர்ப்பது, மின்சார கார்களுக்கான (e-4Ws) உற்பத்தி மையமாக இந்தியாவை உருவாக்குவது, உள்நாட்டு மதிப்பு கூட்டலை (DVA) அதிகரிப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- 2024 அக்டோபர் 28 அன்று அறிவிக்கப்பட்ட பிரதமரின் மின்சாரப் பேருந்து – கட்டண பாதுகாப்பு செயல்முறைத் (PSM) திட்டம், மொத்தம் ரூ. 3,435.33 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் செயல்படுத்தப்படுகிறது.
- இந்தியாவில் மேம்பட்ட வேதியியல் செல் (ஏசிசி), பேட்டரி சேமிப்புக்கான உற்பத்தி வசதிகளை அமைப்பதற்கான உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை (பி.எல்.ஐ) திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டம் இந்தியாவின் பேட்டரி உற்பத்தி திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- பிற முயற்சிகள்/ நிகழ்ச்சிகள்:
- கனரகத் தொழில்கள் அமைச்சகம் 16.01.2024 அன்று புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் அப்போதைய கனரகத் தொழில்கள் துறை அமைச்சர் டாக்டர் மகேந்திர நாத் பாண்டே தலைமையில் பிஎல்ஐ-வாகன மாநாட்டை ஏற்பாடு செய்தது. இது ஆட்டோமொபைல் மற்றும் வாகன உதிரிபாகத் தொழிலுக்கான பிஎல்ஐ திட்டத்தின் முக்கிய அம்சங்களை எடுத்துரைப்பதாக அமைந்தது.
- இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கத்துடன் (SIAM) MHI இணைந்து 17 ஜூலை 2024 அன்று மின்சார வாகன தொழில் துறை தொடர்பான பயிலரங்குக்கு மத்திய கனரக தொழில்கள் அமைச்சகம் ஏற்பாடு செய்தது. மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் திரு எச்.டி.குமாரசாமி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். வளர்ந்து வரும் மின்சார வாகனத் தொழிலுக்கு திறமையான பணியாளர்களை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டு இந்த பயிலரங்கு நடத்தப்பட்டது.
- பட்ஜெட் அறிவிப்புகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செயல்படுத்தும் நோக்கத்துடன் முக்கிய பங்குதாரர்களை ஒன்றிணைக்கும் பட்ஜெட்டுக்கு பிந்தைய காணொலிக் கருத்தரங்கம் 22 ஆகஸ்ட் 2024 அன்று மத்திய கனரக தொழில்கள் துறை அமைச்சர் திரு எச்.டி. குமாரசாமி தலைமையில் நடைபெற்றது.
- 18 செப்டம்பர், 2024 அன்று புது தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்தியாவின் போக்குவரத்துச் சூழல் அமைப்பை மாற்றுவதில் ஃபேம் திட்டத்தின் பங்கு என்பது தொடர்பான நிகழ்வு, மத்திய அமைச்சர் திரு எச்.டி.குமாரசாமி தலைமையில் நடைபெற்றது.
- 2024 அக்டோபர் 2 முதல் 2024 அக்டோபர் 31 வரை தூய்மை குறித்த தனது சிறப்பு இயக்கத்தை அமைச்சகம் வெற்றிகரமாக நிறைவு செய்தது. பயன்பாடு அற்ற பழைய உடைசல்களை அகற்றுவதன் மூலம் ரூ.6.95 கோடி (தோராயமாக) வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. 31.64 லட்சம் சதுர அடி (தோராயமாக) இடம் விடுவிக்கப்பட்டு, புதிய அலுவலக இடங்கள், கூட்ட அரங்கங்கள், நூலகங்கள் போன்றவை மறுபயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
***
(Release ID: 2085938)
TS/PLM/AG/KR
(Release ID: 2086001)
Visitor Counter : 17