உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட 75-வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் மாநிலங்களவை விவாதத்தில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா ஆற்றிய பதிலுரை

Posted On: 17 DEC 2024 10:23PM by PIB Chennai

இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டதன் 75-வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் விவாதத்தின் போது மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர்  திரு அமித் ஷா மாநிலங்களவையில் தனது பதிலை வழங்கினார்.

இந்திய அரசியலமைப்பு மிகவும் விரிவாக எழுதப்பட்டது என்றும், இது பரவலான விவாதங்களின் பாரம்பரிய இந்திய நடைமுறையின் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். 22 மதங்கள், சாதிகள் மற்றும் சமூகங்கள் மற்றும் ஒவ்வொரு சுதேச மாநிலம் மற்றும் ராஜ்யத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 299 உறுப்பினர்களைக் கொண்ட அரசியலமைப்பு சபையின் மாறுபட்ட அமைப்பை அவர் எடுத்துரைத்தார், இது நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் அனைவரையும் உள்ளடக்கிய பிரதிநிதித்துவத்தை உறுதி செய்தது, என்றார்.

அரசியலமைப்பின் 75 ஆண்டுகால பயணம் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அரசுகளால் அது எவ்வாறு நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்பதன் முக்கியத்துவத்தை அவர்  வலியுறுத்தினார். ஒரு அரசியலமைப்புச் சட்டத்தின் செயல்திறன், அதை அமல்படுத்தும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டவர்களைப் பொறுத்தே அமையும் என்ற டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் ஆழ்ந்த கருத்தை அவர் நினைவு கூர்ந்தார்.

இந்தியாவின் அரசியலமைப்பு ஒருபோதும் மாற்ற முடியாததாக கருதப்படவில்லை என்று வலியுறுத்திய திரு அமித் ஷா, அதன் 368-வது பிரிவே இந்த மாற்றங்களுக்கு இடமளிக்கும் வகையில் திருத்தங்களை அனுமதிக்கிறது என்று அவர் தெரிவித்தார். அடல் பிகாரி வாஜ்பாய் ஆட்சியில் 6 ஆண்டுகளும், பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் 10 ஆண்டுகளும் என தனது கட்சியின் தலைமையின் கீழ், அரசியலமைப்பில் 22 திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன என்று திரு ஷா எடுத்துரைத்தார். இதற்கு மாறாக, எதிர்க்கட்சி தனது 55 ஆண்டுகால ஆட்சியில் 77 அரசியலமைப்பு திருத்தங்களை அமல்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார். இந்தத் திருத்தங்களின் பின்னணியில் உள்ள நோக்கம் குறித்து கேள்வி எழுப்பிய திரு ஷா, அவை ஜனநாயகத்தை வலுப்படுத்துவது, அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமைகளை உறுதி செய்வது அல்லது அரசியல் அதிகாரத்தைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டதா என்று கேள்வி எழுப்பினார். ஒரு கட்சியின் தன்மை, ஆட்சிக்கான அதன் அணுகுமுறை மற்றும் அரசியலமைப்பின் மீதான அதன் அர்ப்பணிப்பு ஆகியவை அரசியலமைப்பு திருத்தங்களின் நோக்கம் மற்றும் உந்துதல்கள் மூலம் வெளிப்படுகின்றன என்றார் அவர்.

முக்கிய அரசியலமைப்பு திருத்தங்கள் மற்றும் இந்தியாவின் ஜனநாயக கட்டமைப்பில் அவற்றின் தாக்கங்களை அமைச்சர் கோடிட்டுக் காட்டினார். தேர்தல்களில் அரசியலமைப்பை ஒரு அரசியல் கருவியாகப் பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகளை விமர்சித்து, பொதுமக்களை தவறாக வழிநடத்துவதற்கும் நேர்மையற்ற முறையில் வாக்குகளைப் பெறுவதற்கும் அக்கட்சிகள் அரசியலமைப்பின் நகல்களைக் கையில் எடுப்பதாகக் கூறினார். இந்திய அரசியல் வரலாற்றில் முன் எப்போதும் நிகழாத செயல் என்று இதை கண்டித்த அவர், அரசியலமைப்பு என்பது அரசியல் ஆதாயங்களுக்காக பயன்படுத்தப்படுவதற்கான ஒரு சின்னம் அல்ல, ஆனால் மரியாதையைக் கோரும் ஒரு புனிதமான நம்பிக்கை என்று வலியுறுத்தினார்.

இந்தியாவின் ஒரு அங்குல நிலம் கூட மற்றொரு நாட்டுக்கு வழங்கப்பட வேண்டுமானால், அதற்கு அரசியலமைப்பின் பிரிவு 1 இல் திருத்தம் தேவைப்படும் என்று அவர் வலியுறுத்தினார். முந்தைய அரசு தமிழ்நாட்டிற்கு அருகிலுள்ள கச்சத்தீவை ஒரு ஒப்பந்தத்தின் மூலம் இலங்கைக்கு விட்டுக்கொடுத்ததாகவும், அரசியலமைப்பு திருத்தத்தை கோராமல் அவ்வாறு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இதை ஒரு பொறுப்பற்ற செயல் என்று விமர்சித்த அவர், இந்தியாவில் முந்தைய அரசு  செய்ததைப் போன்ற நடவடிக்கைகளில் வேறு எந்த நாட்டின் தலைமையும் ஈடுபடவில்லை என்று குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2085487

  

***

(Release ID: 2085487)
VL/BR/RR/KR


(Release ID: 2085517) Visitor Counter : 41