சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் சுகாதார இயக்கம் குறித்த புதிய தகவல்

Posted On: 17 DEC 2024 3:28PM by PIB Chennai

ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் சுகாதார இயக்கம் ஒவ்வொரு குடிமகனின் நீண்டகால மின்னணு சுகாதார பதிவை உருவாக்க சுகாதார சூழல் அமைப்பிற்குள் அது குறித்த தரவுகளின் பரஸ்பர செயல்பாட்டை உறுதி செய்யும் வகையில் இணையதளத்தை உருவாக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஒருங்கிணைந்த டிஜிட்டல் சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்த தேவையான கட்டமைப்புகளை உருவாக்குவதை இந்த இயக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் சுகாதார இயக்கம், இதில் பதிவு செய்யப்பட்ட நபர்களின் கணக்குகள்,  சுகாதார வல்லுநர் பதிவேடு, சுகாதார வசதி பதிவேடு, மருந்து பதிவேடு போன்ற தரவுகளை உள்ளடக்கியது.

ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் சுகாதார இயக்கம்  வெளிப்படைத் தன்மை மற்றும் பாதுகாப்பை  கொண்டுள்ளதுடன் சுகாதார வசதிகளை உரிய நேரத்தில் வழங்குவதையும் நோக்கமாக கொண்டுள்ளது.

2024  டிசம்பர் 10-ம் தேதி  நிலவரப்படி, மொத்தம் 71,16,45,172 பேர் ABHA ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் சுகாதார இயக்கத்தில் பதிவு செய்துள்ளனர்.

சுகாதார சூழல் அமைப்பை மேம்படுத்துவதில் டிஜிட்டல் பதிவுகள் மூலம் அது குறித்த தரவுகளை பராமரிப்பதற்கான நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு முன்னுரிமை வழங்கி வருகிறது.

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திரு. பிரதாப்ராவ் ஜாதவ் இதனைத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2085201

---

TS/SV/KPG/DL


(Release ID: 2085427) Visitor Counter : 53