உள்துறை அமைச்சகம்
மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் உள்ள மகளிர் பிரிவின் முக்கிய அம்சங்கள்
Posted On:
17 DEC 2024 2:51PM by PIB Chennai
மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் உள்ள மகிளா பட்டாலியனின் (மகளிர் பிரிவு)முக்கிய அம்சங்கள் வருமாறு:
(i) மூத்த மகளிர் படைத் தளபதி தலைமையில் பல்வேறு பதவிகளில் உள்ள 1025 மகளிர் ரிசர்வ் பிரிவு உள்ளது.
(ii) விமான நிலையங்கள், தில்லி மெட்ரோ, அரசு கட்டிட பாதுகாப்பு, பொதுத்துறை நிறுவனங்கள் போன்றவற்றில் பாதுகாப்பு பணிகளில் பெண்களின் செயல்பாட்டுத் தேவைகளை மகளிர் ரிசர்வ் பிரிவு பூர்த்தி செய்யும்.
(iii) படையில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரித்தல்.
(iv) மத்திய அரசால் ஒப்படைக்கப்படும் பிற கடமைகளை நிறைவேற்றுதல்.
மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்களின் பல்வேறு பதவிகளில் உள்ளவர்களுக்கான பயிற்சித் திட்டங்கள், கால அளவு மற்றும் பாடத்திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்ட விதிமுறைகளின்படி செயல்படுத்தப்படுகின்றன.
மகளிர் பிரிவின் பல்வேறு பதவிகளில் உள்ளவர்கள் நேரடி நியமனம் அல்லது பதவி உயர்வு மூலம் தேர்வு விதிகளின்படி நியமிக்கப்படுகின்றனர்.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் உள்துறை இணையமைச்சர் திரு. நித்யானந்த் ராய் இதனைத் தெரிவித்தார்.
***
TS/PKV/AG/KR
(Release ID: 2085370)
Visitor Counter : 33