குடியரசுத் தலைவர் செயலகம்
இலங்கை அதிபரைக் கௌரவித்து குடியரசுத் தலைவர் விருந்தளித்தார்
Posted On:
16 DEC 2024 9:46PM by PIB Chennai
குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (டிசம்பர் 16, 2024) குடியரசுத் தலைவர் மாளிகையில் இலங்கை அதிபர் திரு அனுர குமார திசநாயகாவைக் கௌரவிக்கும் வகையில் விருந்து அளித்தார்.
குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வருகை தந்த அதிபர் திசநாயக மற்றும் அவரது குழுவினரை வரவேற்ற குடியரசுத் தலைவர், அண்மையில் இலங்கையில் நடைபெற்ற குடியரசுத் தலைவர் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்றதற்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இந்தியாவின் 'அண்டை நாடுகளுக்கு முதலிடம்' கொள்கை மற்றும் சாகர் தொலைநோக்கு ஆகியவற்றில் இலங்கை ஒரு முக்கிய அங்கமாக உள்ளது என்று குடியரசுத் தலைவர் கூறினார். நெருங்கிய மற்றும் நம்பகமான தோழமை நாடு என்ற வகையில், இலங்கையின் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கான இலங்கை அரசின் முயற்சிகளுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று அவர் கூறினார்.
இன்று வெளியிடப்பட்ட கூட்டறிக்கை, பன்முகத்தன்மை கொண்ட இருதரப்பு உறவுகளை முன்னெடுத்துச் செல்வதில் இரு நாடுகளும் கொண்டுள்ள உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது என்று குடியரசுத் தலைவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
இலங்கையுடனான இந்தியாவின் விரிவான வளர்ச்சிக்கான உதவிக் கூட்டாண்மை இலங்கையின் முன்னுரிமைகள் மற்றும் தேவைகளை அடிப்படையாகக் கொண்டது என்று குடியரசுத் தலைவர் கூறினார். இந்தியாவின் முதலீடுகள், பொருளாதார மீட்சி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு உதவும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
நமது மக்களுக்கு இடையேயான வரலாற்று ரீதியான உறவுகள் நமது இருதரப்பு ஒத்துழைப்பின் அடிப்படையான, போற்றத்தக்க அம்சம் என்பதையும் குடியரசுத் தலைவர் நினைவுகூர்ந்தார்.
இந்தப் பயணம் இருதரப்பு உறவுகளை முன்னோக்கி எடுத்துச் செல்லவும், இரு நாட்டு மக்களின் அமைதி மற்றும் வளத்துக்கும் உத்வேகம் அளிக்கும் என்று இரு தலைவர்களும் நம்பிக்கை தெரிவித்தனர்.
***
(Release ID: 2085046)
TS/PKV/AG/KR
(Release ID: 2085126)
Visitor Counter : 15