குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

பயிர்க் கழிவுகளை எரிக்கும் பிரச்சினைக்கு முறையான தீர்வு காண வேண்டும் - குடியரசுத்துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர்

प्रविष्टि तिथि: 14 DEC 2024 5:30PM by PIB Chennai

பயிர்க் கழிவுகளை எரிக்கும் பிரச்சினைக்கு முறையான தீர்வு காண வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் வலியுறுத்தியுள்ளார். புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்ற தேசிய எரிசக்தி சேமிப்பு தின விழா 2024-ல் பேசிய திரு ஜக்தீப் தன்கர், பயிர்க் கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் அபாயகரமான சுற்றுச்சூழல் சூழ்நிலைகளால் தேசிய தலைநகரமான தில்லி ஒவ்வொரு ஆண்டும் பாதிக்கப்படுகிறது என்றார். நாம் புதுமை அணுகுமுறையில் இறங்க வேண்டும் எனவும் முறையான தீர்வைக் காண வேண்டும எனவும் அவர் கூறினார்.

நமது நாகரிக நெறிமுறைகள், பாரம்பரிய ஞானம் ஆகியவை பற்றிக் குறிப்பிட்ட திரு ஜக்தீப் தன்கர், நம்மிடம் ஆயிரக்கணக்கான ஆண்டுகால நாகரிக நெறிமுறைகள் உள்ளன என்று கூறினார். நமது வேதங்கள், புராணங்கள், நமது இதிகாசங்கள் மகாபாரதம், ராமாயணம், கீதையின் ஞானம், போன்றவற்றால் நமக்கோ உத்வேகம் கிடைக்கிறது என அவர் தெரிவித்தார்.

அரசியலமைப்பு நமக்கு அடிப்படை உரிமைகளை மட்டுமல்லாமல், அடிப்படைக் கடமைகளையும் வழங்கியுள்ளது என்று அவர் கூறினார். பொறுப்பான நுகர்வின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். வளங்களை உகந்த முறையில் பயன்படுத்துதல் என்பது நமது கடமையாகும் என்று அவர் கூறினார்.

மத்திய மின் துறை இணையமைச்சர் திரு ஸ்ரீபத் யெஸ்ஸோ நாயக், மின்சாரத் துறை செயலாளர் திரு பங்கஜ் அகர்வால் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

----

PLM/DL


(रिलीज़ आईडी: 2084484) आगंतुक पटल : 54
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , English , Urdu , हिन्दी , Marathi