உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான உணவு பதப்படுத்தும் தொழில்முனைவோர்களுக்கான நிதி : சுமார் ஒரு கோடி குறு உணவு பதனப்படுத்தும் தொழில் நிறுவனங்களுக்கு நிதி உதவி

Posted On: 12 DEC 2024 12:37PM by PIB Chennai

பிரதமரின்  வேளாண் மேம்பாட்டுத் திட்டம், உணவு பதனப்படுத்தும் தொழிலுக்கான உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டம், நாடு முழுவதும் மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் சிறு உணவு பதனப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்துதல் திட்டம் ஆகியவற்றின் மூலம் சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கு தொடர்புடைய தொழில்களை அமைக்கவும் விரிவுபடுத்துவதற்கும் உணவு பதனப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம் ஊக்குவித்து வருகிறது. இத்திட்டங்கள் பிராந்தியம் அல்லது மாநிலம் சார்ந்தவை அல்ல. ஆனால் தேவையின் அடிப்படையில் செயல்படுத்தப்படுகின்றன.

பிரதமரின் வேளாண் நீர்ப்பாசனத் திட்டத்தின் துணைத் திட்டங்களின் கீழ், 15-வது நிதிக் குழுக் காலத்திற்கு 5520 கோடி ரூபாய் மொத்த ஒதுக்கீட்டில், தொழில் முனைவோருக்கு பெரும்பாலும் கடனுடன் இணைந்த நிதி உதவியை (மூலதன மானியம்) மத்திய உணவு பதனப்படுத்துதல் தொழில் அமைச்சகம் வழங்குகிறது. 2024 அக்டோபர் 31 வரை 41 மெகா உணவுப் பூங்காக்கள், 399 குளிர்பதன சங்கிலி திட்டங்கள், 76 வேளாண் பதனப்படுத்தும் தொகுப்புகள், 559 உணவு பதனப்படுத்தும் பிரிவுகள், 61 பின்னோக்கிய மற்றும் முன்னோக்கிய இணைப்புகள் திட்டங்களை உருவாக்குதல் மற்றும் 51 செயல்பாட்டு பசுமை திட்டங்கள் ஆகியவற்றுக்கு 2024 அக்டோபர் 31 வரை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமரின் குறு உணவு பதனப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்துதல் திட்டத்தின் கீழ், குறு உணவு பதனப்படுத்தும் நிறுவனங்களை அமைக்க / மேம்படுத்த நிதி, தொழில்நுட்ப மற்றும் வர்த்தக ஆதரவு அளிக்கப்படுகிறது. இத்திட்டம் 2020-21 முதல் 2025-26 வரை ரூ.10,000 கோடி மொத்த ஒதுக்கீட்டில் செயல்பாட்டில் உள்ளது. 2024 அக்டோபர் 31 வரை மொத்தம் 1,08,580 குறு உணவு பதனப்படுத்தும் நிறுவனங்களுக்கு இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மக்களவைக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்துறை இணையமைச்சர் திரு ரவ்னீத் சிங் பிட்டு இத்தகவலை தெரிவித்தார்.

***

(Release ID: 2083606)
TS/PKV/RR/KR

 


(Release ID: 2083700) Visitor Counter : 12


Read this release in: English , Urdu , Hindi