மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் சமூக ஊடக பொறுப்புடைமை மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆளுமை குறித்து ஒருமித்த கருத்தை வலியுறுத்தினார்
Posted On:
11 DEC 2024 3:40PM by PIB Chennai
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், ரயில்வே மற்றும் தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், நாடாளுமன்றத்தில் செயற்கை நுண்ணறிவு ஆளுமை மற்றும் வளர்ச்சி குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தபோது, வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு நிலப்பரப்பு, சமூக ஊடக பொறுப்புடைமை மற்றும் வலுவான சட்ட கட்டமைப்புகளின் தேவை ஆகியவற்றால் ஏற்படும் முக்கியமான சவால்களை எடுத்துரைத்தார். போலி செய்திகளை எதிர்த்துப் போராடுவதற்கும், டிஜிட்டல் யுகத்தில் துல்லியமான விவரிப்புகளை உறுதி செய்வதற்கும் பேச்சு சுதந்திரத்தை சமநிலைப்படுத்துவதன் முக்கியத்துவத்தை அமைச்சர் எடுத்துக் காட்டினார்.
சமூக மற்றும் சட்ட பொறுப்புணர்வை நிறுவுவதற்கு குறிப்பிடத்தக்க ஒருமித்த கருத்து தேவை என்று அவர் வலியுறுத்தினார். ஒருபுறம் பேச்சு சுதந்திரம் மற்றும் மறுபுறம் பொறுப்புக்கூறல் ஆகியவை விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்களாகும். சபை ஒப்புக்கொண்டால், முழு சமூகத்திலும் ஒருமித்த கருத்து இருந்தால், நாம் புதிய சட்டத்தை கொண்டு வர முடியும்" என்று அவர் மேலும் கூறினார்.
தனியுரிமை மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆளுகை குறித்த கவலைகளையும் மத்திய அமைச்சர் தெரிவித்தார். உள்நாட்டு கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்களை உருவாக்க அரசு எடுத்த செயலூக்கமான நடவடிக்கைகள் பற்றிய விவரங்களை அமைச்சர் பகிர்ந்து கொண்டார்.
செயற்கை நுண்ணறிவு இயக்கத்தின் கீழ், பயன்பாட்டு மேம்பாடு முக்கிய தூண்களில் ஒன்றாகும் என்று கூறிய அவர், இந்தியாவின் தனித்துவமான தேவைகளுக்கு ஏற்ப புதிய கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்துவதாக கூறினார்.
செயற்கை நுண்ணறிவுத் துறையில் இந்தியாவின் உலகளாவிய தலைமையையும் அமைச்சர் எடுத்துரைத்தார். "செயற்கை நுண்ணறிவு ஆளுகை குறித்த உலகளாவிய சிந்தனையை வடிவமைப்பதில் இந்தியா முன்னணி நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது என்று அவர் கூறினார்.
***
PKV/RJ/DL
(Release ID: 2083515)