பாதுகாப்பு அமைச்சகம்
மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் திரு விளாடிமிர் புட்டினுடன் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் சந்திப்பு
Posted On:
10 DEC 2024 9:01PM by PIB Chennai
ராணுவம் மற்றும் ராணுவ ஒத்துழைப்புக்கான இந்திய-ரஷ்ய அரசுகளுக்கு இடையிலான ஆணையத்தின் 21-வது அமர்வின் இடையே, பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், 2024 டிசம்பர் 10 அன்று மாஸ்கோவில் ரஷ்ய கூட்டமைப்பின் தலைவர் திரு விளாடிமிர் புட்டினை சந்தித்தார். பிரதமர் திரு. நரேந்திர மோடியின் வாழ்த்துகளை பாதுகாப்பு அமைச்சர், அதிபரிடம் தெரிவித்தார்.
திரு ராஜ்நாத் சிங் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதித்தார். இரு நாடுகளுக்கும் இடையேயான கூட்டாண்மை அளப்பரிய ஆற்றலைக் கொண்டுள்ளது என்றும், ஒருங்கிணைந்த முயற்சிகள் குறிப்பிடத்தக்க பலன்களுக்கு வழிவகுக்கும் என்றும் இரு தலைவர்களும் தெரிவித்தனர்.
இந்த சந்திப்பின் போது, திரு ராஜ்நாத் சிங், "இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவு மிக உயர்ந்தது மற்றும் ஆழமானது" என்று கூறினார். இந்தியா எப்போதும் தனது ரஷ்ய நண்பர்களுடன் துணை நிற்கிறது, எதிர்காலத்திலும் இது தொடரும் என்று அவர் மேலும் கூறினார்.
***
(Release ID: 2082985)
TS/BR/KR
(Release ID: 2083113)
Visitor Counter : 17