வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நகர்ப்புற துறைகளுக்கான முதலீடுகள் 16 மடங்கு அதிகரித்து இப்போது ரூ.28,52,527 கோடியாக உள்ளது

Posted On: 10 DEC 2024 1:45PM by PIB Chennai

மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் மற்றும் மின்சக்தித் துறை அமைச்சர் திரு மனோகர் லால் புதுதில்லியில் இன்று செய்தியாளர் கூட்டத்தில் நகர்ப்புறத் துறை முதலீடுகள் கணிசமாக அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். 2004-14-ம் ஆண்டில் சுமார் 1,78,053 கோடி ரூபாயாக இருந்த முதலீடுகள் 2014-ஆம்  ஆண்டு முதல் 16 மடங்கு அதிகரித்து இப்போது 28,52,527 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என்று தெரிவித்தார். இந்த அதிகரிப்பு 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியா இலக்கை அடைவதற்கான அரசின் உறுதிப்பாட்டை சுட்டிக் காட்டுவதாக அவர் கூறினார்.

நகரமயமாதலின் விரைவான விகிதம், நாட்டின் வளர்ச்சி உத்தியின் மைல்கல்லாக நகர்ப்புற வளர்ச்சியை ஆக்கியுள்ளது என்று திரு மனோகர் லால் குறிப்பிட்டார். கடந்த ஆறு மாதங்களில், நகர்ப்புற வளர்ச்சித் திட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டு, அதிக விரைவுடனும், திறமையுடனும் செயல்படுத்தப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.

அம்ருத் திட்டத்தின் சாதனைகள்

புத்துணர்ச்சி மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான அடல் இயக்கத்தின் கீழ் உள்ள முக்கிய சாதனைகளையும் மத்திய அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

* 4,649 எம்எல்டி நீர் சுத்திகரிப்பு திறன்.

* 4,429 எம்எல்டி கழிவுநீர் சுத்திகரிப்பு திறன்.

நவீன நகரங்கள் மற்றும் புதிய நகரங்கள் திட்டம்

நவீன நகரங்கள் திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, விரைவான நகரமயமாக்கலின் பிரச்சினைகளை நிர்வகிக்க புதிய நகரங்கள் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக திரு மனோகர் லால் அறிவித்தார்.

நகர்ப்புற நகர்வை மேம்படுத்துவதில் அரசு கவனம் செலுத்தி வருவதை அமைச்சர் எடுத்துரைத்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2082648

***

TS/IR/AG/KR


(Release ID: 2082710) Visitor Counter : 20


Read this release in: Odia , English , Urdu , Hindi , Kannada