குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
ஆக்கப்பூர்வமான விவாதங்கள், நேர்மை, தன்னலமற்ற அர்ப்பணிப்பு, இரக்கம், பரஸ்பர மரியாதை ஆகியவை ஆளுகையின் ஐந்து சிறந்த அம்சங்கள்- குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர்
Posted On:
08 DEC 2024 6:25PM by PIB Chennai
வளர்ந்த இந்தியா என்பது இனி கனவு அல்ல எனவும் அது உறுதியான இலக்கு என்றும் குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார். 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியா ஒரு வளர்ந்த நாடு என்ற அந்தஸ்தை அடைவதை உறுதி செய்ய நாம் உறுதியுடன் செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
ஹரியானாவின் குருஷேத்ராவில் நடைபெற்ற சர்வதேச கீதா மஹோத்சவ் -2024 நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர், கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியா பொருளாதார முன்னேற்றத்தை அடைந்துள்ளதுடன், அபாரமான கட்டமைப்புகளை உருவாக்கி இருப்பதாக கூறினார். இந்தியாவின் குரல் உலக அரங்கில் இப்போது வலுவாக எதிரொலிக்கிறது என அவர் குறிப்பிட்டார்.
"பஞ்சாமிர்த மாதிரி" எனப்படும் ஐந்து அம்ச ஆட்சி முறையின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். ஆக்கபூர்வமான உரையாடல், நேர்மை, தன்னலமற்ற அர்ப்பணிப்பு, இரக்கம், பரஸ்பர மரியாதை ஆகிய ஐந்தும் அவசியம் என்றார்.
நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் சில சக்திகள் இந்தியாவின் பொருளாதாரத்தையும் நிறுவனங்களையும் பலவீனப்படுத்த திட்டமிட்டு முயற்சிக்கின்றன் என அவர் கூறினார். அவர்களின் நோக்கம் நமது அரசியலமைப்பு நிறுவனங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதும், முன்னேற்றத்திற்கான நமது பாதையை சீர்குலைப்பதும் ஆகும் என அவர் கூறினார். இத்தகைய சக்திகளை அடையாளம் கண்டு எச்சரிக்கையுடன் செயல்பட்டு அவர்களின் திட்டங்களை முறியடிக்க வேண்டும் என குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் கூறினார்.
ஹரியானா ஆளுநர் திரு பண்டாரு தத்தாத்ரேயா, ஹரியானா முதலமைச்சர் திரு நயப் சிங் சைனி, சுவாமி ஞானானந்த் ஜி மகராஜ் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
***
PLM /DL
(Release ID: 2082190)
Visitor Counter : 29