கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
துறைமுகங்களில் பசுமை எரிசக்தி இழுவைப் படகுகள் பயன்படுத்தப்பட உள்ளன
Posted On:
06 DEC 2024 4:11PM by PIB Chennai
டீசலுக்கு மாற்றாக பசுமை எரிசக்தியைக் கொண்டு கப்பல்களை இயக்கும் திட்டத்தை 2024-ம் ஆண்டு முதல் 2040-ம் ஆண்டுக்குள் 5 கட்டங்களாக நிறைவேற்றும் வகையில் செயல்திட்டம் ஒன்று வகுக்கப்பட்டுள்ளது.
வழக்கமான எரிபொருள் பயன்பாட்டிலிருந்து படிப்படியாக பசுமை எரிசக்திப் பயன்பாட்டுக்கு மாறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
2024 ஆகஸ்ட் 16 -ம் தேதி தொடங்கப்பட்ட இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு நான்கு பெரிய துறைமுகங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு துறைமுகத்திலும் குறைந்தது இரண்டு பசுமை இழுவைப் படகுகளை கொள்முதல் செய்ய அல்லது வாடகைக்கு அமர்த்துவது என்ற இலக்குடன் இத்திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது.
வரும் 2030-க்குள் துறைமுகங்களில் உள்ள கப்பல்கள் இயங்குவதன் மூலம் வெளியேற்றப்படும் பசுமைக்குடில் வாயுக்களின் உமிழ்வை 30% அளவிற்கு குறைப்பதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் திரு. சர்பானந்த சோனோவால் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
**
TS/SV/KPG/KR/DL
(Release ID: 2081606)
Visitor Counter : 21