சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
விரைவு நீதிமன்றங்கள்
Posted On:
05 DEC 2024 4:11PM by PIB Chennai
விரைவு நீதிமன்றங்கள் (எஃப்.டி.சி) உள்ளிட்ட துணை நீதிமன்றங்களை அமைப்பதும், அவற்றின் செயல்பாடுகளும் அந்தந்த உயர் நீதிமன்றங்களுடன் கலந்தாலோசித்து செயல்மடுத்துவது மாநில / யூனியன் பிரதேச அரசுகளின் அதிகார வரம்பிற்குள் வருகிறது. இதுபோன்ற நீதிமன்றங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை, மாநில அரசுகள் அவற்றின் தேவைக்கும் ஆதாரங்களுக்கும் ஏற்ப செய்ய வேண்டும். மத்திய அரசால் அமைக்கப்பட்ட 14-வது நிதிக்குழு, 2015-2020-ம் ஆண்டில் 1800 விரைவு நீதிமன்ற மையங்களை அமைக்க பரிந்துரை செய்திருந்தது. கொடூரமான வழக்குகள், பெண்கள், குழந்தைகள், மூத்த குடிமக்கள், ஊனமுற்றோர் தொடர்பான சிவில் வழக்குகள், தீராத நோய்களால் பாதிக்கப்பட்ட நபர்கள், 5 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள சொத்து தொடர்பான வழக்குகள் ஆகியவற்றை விரைந்து விசாரிக்க ஏதுவாக 2015-2020-ம் ஆண்டில் 1800 மையங்களை அமைக்க மத்திய அரசால் அமைக்கப்பட்ட 14-வது நிதிக்குழு பரிந்துரை செய்திருந்தது.
2015-16-ம் நிதியாண்டு முதல் இந்த விரைவு நீதிமன்றங்களை அமைப்பதற்கு நிதி ஒதுக்குமாறு மாநில அரசுகள் / யூனியன் பிரதேசங்களை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக, மாநில அரசுகள் / யூனியன் பிரதேசங்கள் 31.10.2024 வரை 863 விரைவு நீதிமன்றங்களை அமைத்துள்ளன. இதில் தமிழ்நாட்டில் 72 விரைவு நீதிமன்றங்கள் செயல்பாட்டில் உள்ளன.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் சட்டம், நீதித்துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
----
TS/PLM/KPG/RR/DL
(Release ID: 2081291)
Visitor Counter : 19