மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
தர்மேந்திர பிரதான் இந்திய சைகை மொழிக்கான பிரதமரின் இ-வித்யா டிடிஎச் அலைவரிசையை நாளை தொடங்கி வைக்கிறார்
Posted On:
05 DEC 2024 1:38PM by PIB Chennai
மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், இந்திய சைகை மொழிக்கான பிரதமரின் இ-வித்யா டிடிஎச் சேனல் எண் 31-ஐ நாளை (டிசம்பர் 6, 2024) புதுதில்லியில் தொடங்கி வைக்கிறார். மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் கல்வித் துறை இணையமைச்சர் திரு ஜெயந்த் சவுத்ரி ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகள், சாதனையாளர்கள், சிறப்பு கல்வியாளர்கள், ஐஎஸ்எல் சான்றிதழ் பெற்ற மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் செவித்திறன் குறைபாடுள்ள சமூகத்தை பிரதான நீரோட்டத்தில் இணைக்கும் நிறுவனங்கள் பங்கேற்கும்.
இந்த முக்கியமான முயற்சி தேசிய கல்விக் கொள்கை 2020-ன் நோக்கங்களை ஆதரிக்கிறது, இது மிகவும் உள்ளடக்கிய கல்விச் சூழலை வளர்ப்பதற்கு இந்திய சைகை மொழியை ஊக்குவிக்க பரிந்துரைக்கிறது. தேசிய கல்விக் கொள்கையின் 'இந்திய சைகை மொழி (ஐ.எஸ்.எல்) நாடு முழுவதும் தரப்படுத்தப்பட்டு, செவித்திறன் குறைபாடுள்ள மாணவர்கள் பயன்படுத்துவதற்காக தேசிய மற்றும் மாநில பாடத்திட்ட பொருட்கள் உருவாக்கப்படும். உள்ளூர் சைகை மொழிகள் மதிக்கப்படும், சாத்தியமான மற்றும் பொருத்தமான இடங்களில் கற்பிக்கப்படும்.
இந்திய சைகை மொழியை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பிரத்யேக பிரதமரின் இ-வித்யா சேனலை ஒரு மொழி மற்றும் பள்ளிப் பாடமாக மேம்படுத்துவதற்காக கருத்தாக்கம் முன்வைக்கப்பட்டுள்ளது, இதனால் அதிக மக்கள் மொழியைக் கற்றுக்கொள்ள அணுக முடியும். இந்த சேனலானது பள்ளிக் குழந்தைகள் (மத்திய மற்றும் மாநில பாடத்திட்டங்களில் பயில்பவர்கள்), ஆசிரியர்கள், ஆசிரியப் பயிற்றுனர்கள் மற்றும் ஏனைய பங்குதாரர்களுக்கு வேலைவாய்ப்பு வழிகாட்டல், திறன் பயிற்சி, மனநலம், வகுப்பு வாரியான பாடத்திட்டம், தகவல் தொடர்பு திறன் ஆகியவற்றுக்கான உள்ளடக்கங்களைத் தரும். இந்தி, ஆங்கிலம் போன்ற சொல்மொழிகளைப் போலவே சைகை மொழியையும் ஒரு மொழிப் பாடமாக கற்றுத்தர ஊக்குவிக்கப்படும்.
---
(Release ID 2081008)
TS/PKV/KPG/RR
(Release ID: 2081101)
Visitor Counter : 26